முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நந்திக் கலம்பகம்

      கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது.  தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது.  மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன்.     நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை.  நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்பதாக இருக்கலாம் என்றும் கருதுவர்.     நந்திக் கலம்பகத்தின் பாடல் ஒன்றைத் தற்செயலாய்க் கேட்ட நந்திவர்மன், நூல் முழுவதையும் கேட்க விரும்பினான்.  நூல் முழுவதையும் கேட்டால், அவன் உடல் எரிந்து இறப்பான் என்பதை அறிந்தும் தமிழ்ப் பாடல் கேட்கும் தணியாத ஆவலுக்குத் தன்னையே பலியாக, கொடுக்க முன்வந்தான்.  நூல் முழுவதையும் கேட்ட மன்னன் இறந்தான்.  தமிழுக்காக தமிழ்ப் பாடலுக்காகத் தரணியாளும் மன்னன் தன் உயிரையே உவந்தளித்தான் என்பது உலக வரலாற்றில் வேறெங்கும் காண முடியாத நிகழ்ச்...

கலம்பகம்

     பலவகை வண்ணமும், வடிவமும், வாசகமும் நிறைந்த மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையைக் கதம்பம் என்றாற் போலப் பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பல்வகைச் செய்யுளால் கலந்து பாடப் பெறும் சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது.     இவ்வாறு பாடப்பெறும் கலம்பத்தின் செய்யுள் தொகை, கடவுளர்க்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்க்கு முப்பது என்னும் அளவில் அமைய வேண்டும் என்பதும் விதி.  இவ்வளவினை மீறிய கலம்பகங்களும் உண்டு.  திருக்கலம்பகத்தில் 110 செய்யுட்களும், ஆளுடைய பிள்ளை கலம்பகத்தில் 49 செய்யுட்களும் உள்ளன.     கலம்பகம், பெரும்பான்மை அகத்திணைச் செய்திகளையையும் , சிறுபான்மை புறத்திணைச் செய்திகளையும் அவற்றின் துறைகளையும் பெற்றுத் திகழும்.     கலம்பகங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தோன்றலாயின எனக் கூறுவர் .  காலத்தால் முற்பட்ட கலம்பகம், நந்திக் கலம்பகம், திருவெங்கைக் கலம்பகம், அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம்,தில்லைக் கலம்பகம், திருக்காவலூர்க் கல...

காந்தியம்மை பிள்ளைத் தமிழ்

    பெண்பாற் பிள்ளைத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் விளங்கும் சிறப்புப் பெற்றது. 'திருநெல்வேலிக் காந்தியம்மை பிள்ளைத் தமிழ்'.  இந்நூலைப் பாடியவர் திருநெல்வேலியைச் சார்ந்த தச்சன் நல்லூரில் வாழ்ந்த அழகிய சொக்கநாதர்.  இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டினர் .     சிறுமி காந்தியம்மையைக் கவிஞர் 'வருக வருக' என்றழைக்கும் வருகைப் பருவம் சிறப்பு மிக்கது . வாரா திருந்தால் இனிநான் உன்      வடிவேல் விழிக்கு மைஎழுதேன்  மதிவாள் நுதற்குத் திலகமிடேன்      மணியால் இழைத்த பணிபுனையேன்  பேரா தரத்தினொடு பழக்கம்      பேசேன்; சிறிதும் முகம்பாரேன்  பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்      பிரியமுடன் ஓக்கலையின் வைத்துத்  தேரார் வீதி வளம் காட்டேன்      செய்யக் கனிவாய் முத்தமிடேன்; திகழு மணித்தொட்டிலில் ஏற்றித்      திருக்கண் வளரச் சீராட்டேன்; தாரார் இமவான் தடமார்பில்      தவழும் குழந்தையாய் வருகவே  சாலிப் பதிவாழ் காந்திமதித்    ...

முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ்

      இந்நூலையும் குமரகுருபரரே பாடினார்.  குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார்.  தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார்.  அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார்.      வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும்.  சம்பாதி, சடாயு, இருக்கு வேதம், குமரக் கடவுள், சூரியன் ஆகியோர் சிவபிரானை வழிபட்ட தலமே புள்ளிருக்கு வேளூர் ஆகும்.  இங்குள்ள சிவன் கோயிலில் முத்துக் குமாரசாமி சந்நிதி உள்ளது.  குமரகுருபரர் இம்முத்துக் குமாரசுவாமியின் பெருமைகளை 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' நூலில் விளங்கக் கூறியுள்ளார்.     முத்துக்குமரன், முக் கண்ணணோடு விளையாடும் போது செய்யும் சிறு குறும்புச் செயல்களைப் படிப்பவர் களி கூரக் கூறுகின்றார் குமரகுருபரர்.  குமரன் தந்தையின் மார்பில் ...

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

      ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர்.  இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார்.  இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது.  திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் . முத்தப் பருவத்தில், காலத் தொடுகற் பனை கடந்த      கரு வூலத்துப் பழம் பாடல்  கலைமாச் செல்வர் தேடி வைத்த      கடவுள் மணியே ..... எனத்தொடங்கும் பாடலைக் குமரகுருபரர் அரங்கேற்றுகையில் குழந்தையாய் வந்த மீனாட்சியம்மை, தம் கழுத்திலிருந்த முத்து மாலையைக் கழற்றிக் கவிஞர்க்கு அணிவித்து மறைந்து விட்டாள் என்பர். இந்நிகழ்ச்சி, தொடுக்கும் கடவுட் பழம்பாடல்      தொடையின் பயனே நறைபழுத்த  துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்      சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்து  எடுக்கும்...

பிள்ளைத் தமிழ்

     தான் போற்றும் தெய்வத்தையோ அரசனையோ, சான்றோரையோ குழந்தையாக்கிப் பார்த்துப் பரவசத்துடன் பாடப்படும் சிற்றிலக்கியம், "பிள்ளைத் தமிழ்".  இதனைப் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக்கலி என்றும் வழங்குவது உண்டு.     குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒரு பருவமாகப் பகுத்துக் கொள்வது மரபு.  எனவே மூன்று, ஐந்து , ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று எனப் பத்துப் பருவங்கள் அமையும்.     அவ்வப் பருவத்தில் குழந்தைக்கு இயல்பாக உள்ள நிலை, செயல், தன்மை முதலியவற்றை அமைத்துப் பாடுவர் .  இப்பிள்ளைத் தமிழ் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரு வகைப்படும்.     காப்புப் பருவம், தாலப் பருவம், செங்கீரைப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப்பருவம், வருகைப் பருவம், அம்புலிப் பருவம், சிறுபறைப் பருவம், சிற்றில் பருவம், சிறுதேர்ப் பருவம், என்னும் பத்தும் ஆண்பாற் பிள்ளைத் தமிழுக்குரியன, இதை  சாற்றறிய காப்ப தால் செங்கீரை சப்பாணி  மாற்றரிய முத்தமே வார...

அழகர் கிள்ளை விடு தூது

       திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள சௌந்தரராகவாப் பெருமாள் பவனி வரும்போது கண்டு காதல் கொண்ட தலைவி கிள்ளையைத் தூது விட்டதாக அமைந்த நூலே 'அழகர் கிள்ளை விடு தூது'.  இதனைப் பாடியவர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.  இந்த நூலில் கிள்ளையின் பெருமையைக் கூறும் பகுதி நெஞ்சையள்ளும் சுவைமிக்கது. பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும்  கால்பிடிப்பார் கோடிப்பேர் கண்டாயே - மால்பிடித்தோர்  கைச்சிலை வேலால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ  பச்சிலை ரூபம் படைத்திருந்தாய். வண்டுவிடு தூது       திருவாடுதுறை ஆதினத்தைச் சார்ந்த கச்சியப்ப முனிவர் இயற்றியது, 'வண்டு விடு தூது'.  இது காஞ்சி புரத்திலுள்ள ஆனந்தபுரத்திலுள்ள ஆனந்த ருத்திரேசர் மீது காதல் கொண்ட தலைவி வண்டினைத் தூது விடுவதைக் கூறுகின்றது.     ஆனந்தருத்திரேசர் உலா வருவதால் விளையும் நன்மைகளை விளக்கும் பின்வரும் பகுதியைக் கொண்டே நூலின் முழுச் சிறப்பை உய்த்துணரலாம். வானுலகம் மேன்மைபெற மண்ணுலகம் செம்மாப்ப  ஈனஇடர் முற்றும் இரிந்தோட - ஆன  அறம் தழைப்ப அன்பர்...

தமிழ் விடு தூது

    தன் உள்ளத்துக்குகந்த ஒரு பொருளையே தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுப்பது சிறப்புடைத்து.  தமிழினும் உள்ளத்துகந்த பொருள் எது? அதனால் தமிழ் வளர்க்கும் மதுரையில் குடியிருக்கும்   சொக்கநாதர் மீது மிக்க காதல் கொண்ட காரிகை, தன்  காதல் நோயை அவரிடம் தக்கபடி உரைத்து  தமிழைத் தூது விட்டாள்.  அதுவே 'தமிழ் விடு தூது'.     'தமிழ் விடு தூது' என்னும் சிறந்த தூது நூலை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை.  தமிழையே உணவாய், உணர்வாய், உயிராய்க் கொண்ட தண்டமிழ்ப் பக்தர் - தாய் மொழிப் பித்தர் இந்தக் கவிஞர் என்பது தெரிகின்றது. செந்தமிழும் சைவமும் இரு விழிகளாய்க் கொண்ட வர் இந்த கவிஞர் என்பதும் புரிகின்றது.  இவரது காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டது என்று கூற முடிகிறதேயன்றி, இவர் காலத்தை உறுதியாகக் கூற இயலவில்லை.     தலைவி தமிழின் பெருமையைக் கூறும் பகுதி தமிழ் மொழியின் வரலாற்றையே உள்ளடக்கியதாகவுள்ளது.     முதலில் சிவபிரான், தடாதகைப் பிராட்டியார், விநாயகர், முருகன் ஆகிய நால்வருக்கும் நூல் வணக்கம் தெரிவிக்கின்றது....

தூது

       சிற்றிலக்கியங்களில் ஒன்றான 'தூது' தொல்காப்பியக் காலத்தும் இலக்கியப் பிரிவாக இருந்த ஒன்று. ஒருவரிடம் ஒரு பொருளைப் பெற்று வருவதற்கு ஆற்றல் மிக்க மற்றொருவரை அனுப்புவது தூது.  போர்க்காலத்தே மன்னர் தூதனுப்புவது பண்டைய மரபு. ஒளவையாரும் அதிகமானின் தூதராகத் தொண்டைமானைக் கண்டு வந்ததைப் புறநானூறு உணர்த்தும்.  இது புறத்திணை சார்ந்த தூது.     அகத்திணை சார்ந்த தூது, "காமம் மிக்க கழிபடற்கிளவி" யாகவே அமைந்துள்ளது.  அஃறிணைப்  பொருள்கள் தாம் கூறுவனவற்றைப் பிறரிடம் கூறும் ஆற்றலோ, அவர் கூறும் விடையை அறிந்து வந்து கூறும் ஆற்றலோ,  அற்றவை.  இதை உணர்ந்தும் தமது காதல் உணர்வின் மிகுதியினால் அஃறிணைப் பொருள்களைக் காதல் தூதாக அனுப்புதல் வழக்கமாகும். இதனை இலக்கணம் ஏற்றுக் கொண்டது. 'சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇச்  செய்யா மரபில் தொழில்படுத் தடக்கியும்' என்று தொல்காப்பியமும், 'கேட்குந போலவும் கிளக்குந போலவும்  இயக்குந போலவும் இயற்றுந போலவும்  அஃறிணை மருங்கினும் அறையப் படுமே' என்று நன்னூலும் கூறுகின்றன.     தற்போதுள்ள நூல்களில் ...

சிற்றிலக்கியங்கள்

 V . நாயக்கர் காலம்  கி.பி. 1350 - 1750 சிற்றிலக்கியங்கள்      சங்க காலத்தில் குறுகிய அடிகளைப் பெற்ற தனிப் பாடல்களும், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாட்டுகளும், பொருள் தொடர்நிலையாக வரும் காப்பியங்களும் பெற்றுச் சிறந்திருந்தது, தமிழ்.  தனிப் பாடல்களின் தொகுதிகள், எட்டுத் தொகை நூல்கள்.  பாட்டுகள் பத்தின் தொகுப்பே, பத்துப்பாட்டு.  காப்பியங்களாக உருவானவையே சிலம்பும் மேகலையும்.     தமிழ் மொழியின், இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர், ஏற்கனவே இருந்த இலக்கியங்களைக் கண்டு அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுடன் அமையாது, எதிர்காலத்தில் தோன்றக்கூடிய புதிய இலக்கியங்களையும் ஏற்றுக் கொள்ளும் வகையில், ' விருந்தே தானும்  புதுவது கிளந்த யாப்பின் மேற்றே'. என்று கூறினார்.       யாப்பு என்னும் சொல், யாக்கப்படுவது, பிணைக்கப்படுவது என்னும் பொருளுடையது.  செய்யுள் என்னும் பொருளுடையது.  செய்யுள் என்னும் சொல்லின் பொருளும் இதுவே.  எழுத்து, சொல் முதலிய உறுப்புகளால் அகத்திணை, புறத்திணைக்கு இடமாக இயற்றப்படுதலின் இது யாப்பு எனப்பட்டது....

மூவருலா

      விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் சோழன் உலா ஆகிய மூன்றும் மூவருலா என வழங்கப் பெறும் மூன்றையும் இயற்றியவர் ஒட்டக்கூத்தர்.     கலம்பகங்களில் நந்திக் கலம்பகம் தமிழக வரலாறு கூறும் நூலாகத் திகழ்வது போல, உலா நூல்களில் மூவருலா வரலாற்று நூலாக அமைந்துள்ளது.     விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் அவையிலும் வீற்றிருந்த பேறு பெற்றவர், ஒட்டக்கூத்தர்.  இதனால் சோழர் வரலாற்றைத் துல்லியமாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது.  தாமறிந்த வரலாற்றை இம்மூன்று உலாக்களிலும் தொடுத்து, சோழர் வரலாற்றுக் களஞ்சியமாக இவற்றை மாற்றிவிட்டார்.     பாட்டுடைத் தலைவர்கள் இவர்க்குத் தக்கபடி பரிசளித்தனர்.  இராசராச சோழன் உலாவை அரங்கேற்றிய போது , ஒவ்வொரு கண்ணிக்கும் அவ்வரசன் ஆயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான்.  மற்றொரு வேந்தன் அரிசிலாற்றங்கரையிலிருந்த ஓர் ஊரை இவருக்குப் பரிசாக அளித்தான்.  அவ்வூர் கூத்தனூர் என்று இவர் பெயரால் வழங்கி வருகின்றது.      மூவருலாவின் வரலாற்றுச் சிறப்பினைப் பின்வரு...

திருக்கைலாய ஞான உலா

 திருக்கைலாயத்தில் நிகழ்ந்த சிவபெருமானின் உலாவைப் புகழ்ந்து பாடும் நூலே திருக்கைலாய ஞான உலாவாகும்.  முதலில் தோன்றிய உலா இதுவே என்பதால் இதனை 'ஆதி உலா' என்றும் கூறுவர் .     இந்நூலை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார் . இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார் .     சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பராவார்.  இவர் பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.     சுந்தரராகிய நம்பி ஆரூரர் இறைவனால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையில் ஏறிக் கைலை அடைந்தார்.  சேரமான் பெருமாள் தம் குதிரையில் ஏறிச் சென்று கைலையடைந்தார்.  சேரமான் பெருமாள் தம் குதிரையில் ஏறிச் சென்று கைலையடைந்தார்.  அங்கே சிவபெருமானின் திருமுன்னர் தமது 'திருக்கைலாய ஞான உலா' வை அரங்கேற்றினார்; இவ்வுலா சைவத் திருமுறைகளில் பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.     சிவபெருமான் உலா வரும் தெருக்களில் உள்ள உயர் மாடங்கள், சிவபெருமான் வடிவினைப் பெற்றுத் திகழ்வதாகச் சேரமான் கூறுகின்றார்.

உலா

      தலைவன் வீதியில் உலா வர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை , தெரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகும். இது கலிவெண்பாவால் பாடப்பெறும்.  இவ்வாறு காதல் கொள்ளுதல் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்.  'பெருங்கதை' காப்பியமும், 'உத்தம மகளிர் ஒழிய மற்றைக்  கன்னியர் எல்லாம் காமன் துரந்த  கணையுளம் கழியக் கவினழிவு ' எய்தி வருந்தியதாகக் கூறும்.  எனவே உலா கண்டு காதல் கொள்ளும் மகளிர் குலமகளிர் அல்லர் என்பது தெளிவு.     ஏழு பருவத்தின் வயது முறையைப் பின்வருமாறு கூறுவர் , பேதை 5 - 7, பெதும்பை 8 - 11, மங்கை 12 - 13, மடந்தை 14 - 19, அரிவை 20 - 25 , தெரிவை 26- 32, பேரிளம் பெண் 33 - 40 ஆண்டுகள்.     இவ்விலக்கியத்தில், பாட்டுடைத் தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை எனவும், ஏழு பருவ மாதர் கூடித் தனித் தனியாகக் கூறுவன  உலாவின் ப...

தக்கயாகப் பரணி

      'தக்கயாகப் பரணியை இயற்றிய ஒட்டக்கூத்தர் சோழப் பேரரசர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர்.  'கவிராட்சசன் ' எனப் புகழப்படும் இவர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவருலா முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார்.  இவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் .     தக்கனும், திருமால், பிரமன், இந்திரன், முதலான தேவரும் போரிட, அவர்களை எதிர்த்து வீரபத்திர தேவர் போரிட்டுப் பெற்ற வெற்றியைக் கூறுகின்றது, தக்கயாகப் பரணி.     தமிழ் வல்ல ஒட்டக்கூத்தர் தம் பரணியில், தமிழ் முனிவரான அகத்தியரைச் சிறப்பிக்கும் பகுதி அறிந்து இன்புறுவதற்குரியது!  'வரதன் ஒரு தமிழ் முனிவரன் ' என்கின்றார் கூத்தர்.  வீரபத்திரத் தேவரின் பேய்க் கணங்கள், போர்க்காலத்தில் தமிழ்த் தெய்வமான அகத்தியருக்குத் தீங்கு நேரக் கூடாது என்பதற்காக, அவரைப் பிடித்து தமிழ்ப் பொதிய மலைக்குக் கொண்டு போய் , அங்குள்ள குகைக்குள் செல்ல அடைத்ததை "அகத்தியமைத் தமிழ்ப் பொதியிற் குகைப் புக விட்டடைத்தே " எனக் கூறுகின்றார்.  நூலை முடிக்கும் போதும். 'வாழி தமிழ்ச் சொற் றெரிந்த நூற...

கலிங்கத்துப் பரணி

     பரணி இலக்கியங்களில் மிகவும் பழமையானது 'கலிங்கத்துப் பரணி'.  இதுவே பரணி நூல்களில் தலை சிறந்தது என்று, அன்று முதல் இன்று வரை போற்றப்படுகின்றது.     கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.  இவர் தீபங்குடி என்னும் ஊரினர்.  இவர் கி.பி. 1070 முதல் 1118 வரை ஆண்ட முதல் குலோத்துங்கன் காலத்தவர்.  குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், சோழப் பெரும் படையுடன் கலிங்க நாடு சென்று, வாகை சூடித் திரும்பினான்.  அதன் பின் குலோத்துங்கன் , சயங்கொண்டாரிடம் உரையாடிய போது , "கலிங்கம் வென்றமையால் யானும் சயங்கொண்டான் ஆயினன் "  என்று கூறினான்.  அதைக் கேட்ட புலவர், "அப்படியாயின் சயங்கொண்டானான உன்னைச் சயங்கொண்டானான யான் பாடுவது தகும் " என்று கூறினார்.  அதனால் பிறந்ததே 'கலிங்கத்துப் பரணி' என்று கூறுவர் .     கலிங்கத்துப் பரணி மொத்தம் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது.  அவையாவன: கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு , காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திரசாலம், இராச பாரம்பரியம், பேய்முறைப்பாடு, அவதாரம், காளிக்க...

பரணி

  'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற  மானவனுக்கு வகுப்பது பரணி.'     என்பது இலக்கண விளக்கத்தின் கூற்று.  போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனைச் சிறப்பித்துப் பாடுவதே பரணி என்னும் சிற்றிலக்கியமாகும் .     பரணி என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.  போர்க் குரிய தெய்வமாகிய காளி (கொற்றவை)க்குரிய நாள் பரணி.  எனவே வெற்றி பெற்ற வேந்தன் பரணி நாளில் கொற்றவைக்குக் கூழ் அட்டுப் படைத்துக் கொண்டாடுவது மரபாகும்.     பரணி பலவகை உறுப்புக்களைக் கொண்டது.  அவை கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது.  பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, களம் பாடியது, வாழ்த்து முதலியனவாம். ஒவ்வொரு பரணியிலும் இவ்வுறுப்புக்கள் முறை மாறி வேறு வகையிலும் இடம் பெறுதல் உண்டு.     போரிலே வென்றவரைச் சிறப்பிப்பதே பரணி இலக்கியம் என்றாலும் தோற்றவரைச் சார்ந்தே நூலுக்குப் பெயரிடுவது மரபு .  கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி,பாசவதைப் பரணி, இரணியவதை ப் பரணி முதலியன தோற்றோரின் பெயரிலே அமைந்ததைக் காண்க. 

பெரிய புராணம்

     சங்ககாலத்துக்குப் பின்னே தோன்றிய காப்பியங்கள் யாவும் சமயக் காப்பியங்களே.    பெரிய புராணமும் ஒரு சமயக் காப்பியம்;  சைவக் காப்பியம்;  மற்றக் காப்பியங்கள் வடமொழித் தழுவலாக வந்த காப்பியங்கள். பெரிய புராணமோ, சிலப்பதிகாரம், மணிமேகலை போலத் தமிழ் நாட்டின் சொந்தக் காப்பியம்; தமிழக வரலாற்றுக் காப்பியம். காப்பியக் கவிஞர் சேக்கிழார்      பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார்.  தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றியவர், செங்குட்டுவன் என்னும் சேரமன்னனின் தம்பி.  சைவத்தின் முதல் தமிழ்க் காப்பியத்தை இயற்றிய சேக்கிழாரோ இரண்டாம் குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனின் முதலமைச்சர்;  இளங்கோ அரசைத் துறந்து அடிகளானபிறகு காப்பியம் இயற்றினார்.' சேக்கிழார் காப்பியம் இயற்றியப் பிறகு அமைச்சைத் துறந்து அடிகளானார் ;  சேக்கிழாரடிகள் என அழைக்கப் பெற்றார்.     சைவத்துக்குக் கற்கோயிலாகப் பெரிய கோயில் அமைத்த இராசராசனின் இயற்பெயர், அருள்மொழித் தேவன்.  சைவ சமயத்துக்குச் சொற்கோயிலாகப் பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரின் இயற்...

கம்பராமாயணம்

"கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்  கம்பன் பிறந்த தமிழ்நாடு"      செந்தமிழ் நாட்டின் சிறப்புகளைக் கூற வந்த பாரதியார், கம்பன் பிறந்ததால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருமையுற்றதைக் கூறுகிறார்.  கம்பர் தமிழ் இலக்கிய உலகை ஒளியுறச் செய்த உதய சூரியன்.  ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாக்கவிஞர்; மற்றக் கவிஞர்கள் இவர் முன் குன்றுகளாகக் குன்றிப் போக இமயமாக எழுந்து நிற்கும் புலவர் திலகம், கம்பர்.   ' கல்வியிற் பெரியவர் கம்பர்' 'கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' 'கம்ப நாடகம்' 'கம்ப நாடன் கவிதையிற் போல்  கற்றோர்க்கு இதயம் களியாதே '     என்னும் பழமொழிகளும், பாடல் வரிகளும் கம்பரின் அளப்பரிய கவிப் புலமையை உரைக்கின்றன.  மானுடனாக வால்மீகி  சித்தரித்த இராமனை ஆண்டவராகக் காட்டி மனித குலத்தைப் புனிதப்படுத்திய புதுமைப் புதுமைப் புலவர் கம்பர்.  கவிச் சக்கரவர்த்தியிடம் , 'மன்னவனும் நீயும், வளநாடும் நின்னதோ ' என்று சீறிப் பேசும் தன்மானத் தந்தை கம்பர்.  எண்ணரிய புலவர்கள் விளங்கும் இலக்கிய உலகிலே பன்மீன் நாப்பண்...