விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் சோழன் உலா ஆகிய மூன்றும் மூவருலா என வழங்கப் பெறும் மூன்றையும் இயற்றியவர் ஒட்டக்கூத்தர். கலம்பகங்களில் நந்திக் கலம்பகம் தமிழக வரலாறு கூறும் நூலாகத் திகழ்வது போல, உலா நூல்களில் மூவருலா வரலாற்று நூலாக அமைந்துள்ளது. விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் அவையிலும் வீற்றிருந்த பேறு பெற்றவர், ஒட்டக்கூத்தர். இதனால் சோழர் வரலாற்றைத் துல்லியமாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது. தாமறிந்த வரலாற்றை இம்மூன்று உலாக்களிலும் தொடுத்து, சோழர் வரலாற்றுக் களஞ்சியமாக இவற்றை மாற்றிவிட்டார். பாட்டுடைத் தலைவர்கள் இவர்க்குத் தக்கபடி பரிசளித்தனர். இராசராச சோழன் உலாவை அரங்கேற்றிய போது , ஒவ்வொரு கண்ணிக்கும் அவ்வரசன் ஆயிரம் பொன் பரிசாகக் கொடுத்தான். மற்றொரு வேந்தன் அரிசிலாற்றங்கரையிலிருந்த ஓர் ஊரை இவருக்குப் பரிசாக அளித்தான். அவ்வூர் கூத்தனூர் என்று இவர் பெயரால் வழங்கி வருகின்றது. மூவருலாவின் வரலாற்றுச் சிறப்பினைப் பின்வரு...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.