இலக்கிய புரட்சி தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்துள்ளது சிலப்பதிகாரம். அதுவரையில் நூற்றுக்குக் குறைந்த அடிகளைப் பெற்ற பாடல்களையும் (எட்டுத் தொகை), நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்களையும் (பத்துப்பாட்டு)இயற்றி வந்தனர் சங்கப் புலவர்கள். அவை ஓர் உணர்ச்சியை, ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒருவரது வாழ்வின் ஒரு பகுதியைக் கூறிய தனிப் பாடல்கள். சிலப்பதிகாரம், ஒரு முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுளாகச் சுமார் ஐயாயிரம் அடிகளில் இயற்றப்பட்ட முதல் காப்பியம். காப்பியம் பெற்ற மொழியே உயர்ந்த மொழி. தமிழ் அந்த உயரிய நிலையைப் பெறச் செய்தது சிலப்பதிகாரம். அதுவரை வெண்பா, அகவற்பாவினையே அதிகமாகப் புலவர்கள் பயன்படுத்த, சிலப்பதிகார ஆசிரியர் நிகழ்ச்சிக்குரிய ஓசை நயத்துக்கேற்ப வேறு வேறு பாக்களைப் பயன்படுத்திப் புதுமை செய்தார். உலக மொழிகளின் ஆதி காவியங்கள் அரசனை அல்லது ஆண்டவனைத் தலைவனாக அமைத்துப் பாடப்பட்டவை. இளங்கோ, குடிமக்களில் ஒருவனாகிய கோவலனைக் காவிய நாயகனாகக் கொண்டார். அதனால் இதனைக் குடிமக்கள் காப்பியம் ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.