முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 21, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமழிசையாழ்வார் - பெரியாழ்வார் - ஆண்டாள்

     காஞ்சிபுரத்துக்கு அருகேயுள்ள திருமழிசையில் பார்க்கவர் என்னும் முனிவரின் புதல்வராக அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.  இவரைப் பக்திசாரர் என வழங்குவர்.  இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.     திருமழிசையாழ்வார் முதலாழ்வார்களைப் போலச் சமயப் பொறையுடையவர் அல்லர்.  இவர் சமய வாதம் செய்து பிற சமயத்தினரை வென்றார்.  தம் பாடல்களிலும் பிற சமயத்தினரைக் கண்டித்தார். 'அறியார் சமணர் அயத்தார் பௌத்தர்  சிறியார் சிவப் பட்டார்கள்.'   'நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று ஒராதார்  கற்கின்ற தெல்லாம் கடை' என வரும் பாடல்கள் இவர் மறந்தும் புறந்தொழா மகான் என்பதை நிறுவும்.     இவர் 'திருச்சந்த விருத்தம்' 'நான்முகன் திருவந்தாதி' ஆகியன இயற்றியுள்ளார்.  திருமால் சொல்லாய்.  பொருளாய், சொல்ல முடியாத சோதியாய், எல்லாமாய் இருக்கும் இயல்பை உரைக்கும் திருச்சந்த விருத்தப் பாடலை இங்கே காண்போம்.  ' சொல்லினால் தொடர்ச்சிநீ      சொல்லப்படும் பொருளுநீ  சொல்லினால் சொலப்படாது      தோன்றுகின்ற சோதிநீ...