இந்நூலையும் குமரகுருபரரே பாடினார். குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார். தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார். அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார். வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும். சம்பாதி, சடாயு, இருக்கு வேதம், குமரக் கடவுள், சூரியன் ஆகியோர் சிவபிரானை வழிபட்ட தலமே புள்ளிருக்கு வேளூர் ஆகும். இங்குள்ள சிவன் கோயிலில் முத்துக் குமாரசாமி சந்நிதி உள்ளது. குமரகுருபரர் இம்முத்துக் குமாரசுவாமியின் பெருமைகளை 'முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' நூலில் விளங்கக் கூறியுள்ளார். முத்துக்குமரன், முக் கண்ணணோடு விளையாடும் போது செய்யும் சிறு குறும்புச் செயல்களைப் படிப்பவர் களி கூரக் கூறுகின்றார் குமரகுருபரர். குமரன் தந்தையின் மார்பில் ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.