சோழ நாட்டில் சீகாழியில் தோன்றியவர், நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர். அந்தணர் குலத்தில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் பிறந்தவர். இவர் ஆளுடைய பிள்ளையார் என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர். மூன்றாண்டுப் பிள்ளையாக இருந்த போதே, உமாதேவியாரின் ஞானப் பாலைப் பருகித் தோடுடைய செவியன்' எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர். அது முதல் சிவபெருமான் உறையும் திருத்தலங்கள் பலவற்றுக்கும் சென்று பதிகங்களைப் பண்ணமையைப் பாடிச் சைவ நெறியையும் செந்தமிழ் இலக்கியத்தையும் வளர்த்து வந்தார். சம்பந்தர் காலத்தில், பாண்டிய நாட்டை ஆண்ட நெடுமாறன் சமண சமயத்தவனாய் இருந்தான். பாண்டிமாதேவி மங்கையற்கரசியின் வேண்டுகோளின் படி சம்பந்தர் பாண்டிநாடு சென்று நெடுமாறனின் வெப்பு நோயினை "மந்திரமாவது நீறு" என்னும் பாடல்படி , நீரணிவித்து நீக்கினார். அனல் வாதம், புனல் வாதம் முதலியன புரிந்து சமணரை வென்றார். திருநாவுக்கரசர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், சிறுத்தொண்டர் முதலிய தம் காலத்து அடியார்களைக் கண்டு, பழகி மக...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.