முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 5, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழமொழி - சிறுபஞ்சமூலம்

    8. பழமொழி   பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், திருக்குறள், நாலடியார் ஆகிய இரு நூல்களுக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க பெருமை பெற்றது, பழமொழி.  இந்நூற் பாடல் ஒவ்வொன்றும் ஈற்றடியில் ஒரு பழமொழியைப் பெற்று இருப்பதால் 'பழமொழி' எனும் பெயர் பெற்றது.  நூலில் 400 பாக்கள் உள்ளமையால் இது 'பழமொழி நானூறு' என்னும் பெயராலும் குறிக்கப்பட்டது.     பழமொழி என்பது பண்டுதொட்டுப் பழக்கத்திலிருந்து வழிவழியாக மக்களால் வாய்மொழியாக வழங்கப்பட்டு வருவதாகும். பழமொழி ஒன்றைப் புதிதாய்ப் படைத்து வழங்கும் முறை இல்லை. 'நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்  ஒண்மையும்  என்று இவை விளங்கத் தோன்றி  குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்  ஏது நுதலிய முதுமொழி என்ப.     என்பது பழமொழியாகிய முதுமொழிக்குத் தொல்காப்பியர் வகுத்த இலக்கணம்.  இதற்கு உரை வழங்கிய நச்சினார்க்கினியர், 'பழமொழி இவ்விலக்கணம் பற்றிச் செய்தது' எனக் குறித்துள்ளார்.     பழமொழியைத் தம் பாடலில் பதித்துப் பாடுவது சங்க காலத்திலும் இருந்தது. ' அம்ம வாழி, தோழி, இம்மை  நன்றுசெய்...