ஒரு மொழி தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சிக்குப் பின்னரே இலக்கண அமைதி நிறைந்த பாட்டுத் தோன்ற முடியும். பலர் எழுதிய பல நூறு பாடல்களைத் திரட்டி ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் தொகுத்துத் தொகை நூலாக்க இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும். தொகை நூல்களின் தேவையை முற்றிலும் உணர்ந்து கதைகள், கவிதைகள், அறிவியல் கட்டுரைகள், பழமொழிகள், பொன்மொழிகள் முதலிய தொகை நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் எண்ணிறந்தன எழுந்த காலம் இருபதாம் நூற்றாண்டே. தொகை நூல் என்பது ஒரு மொழியின் இலக்கிய ஏற்றத்தைக் காட்டும் இமயச் சிகரமாகும். தமிழில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பே செம்மை வாய்ந்த தொகை நூல்கள் தோன்றின. அவை மொத்தம் எட்டு. " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை" என்னும் வெண்பா, எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது. இவ்வெட்டினுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் உரைப்பன. புற...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.