முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 6, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பொருநர் ஆற்றுப்படை,சிறுபாண் ஆற்றுப்படை

 2. பொருநர் ஆற்றுப்படை            கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக் கண்ணியார் 248 அடிகளில் பாடியது பொருநர் ஆற்றுப்படை.  இது ஆசிரியப்பாவால் அமைந்ததே; எனினும் கற்போருக்குச் சுவை ஊட்டுவதாக இருசீர் வஞ்சியடிகள் 4 இடையே வருமாறு பாடப்பட்டது.  ஆசிரியப்பாவில் வஞ்சி வரிகள் வரலாம் என்பது, 'ஆசிரிய நடைத்தே வஞ்சி' என்று தொல்காப்பியர் கூறுவதால் உணரலாம்.  சங்க இலக்கியத்தில் முடத்தாமக் கண்ணியார் பாடியதாகக் கிடைப்பது இப்பாடல் ஒன்றே.     பொருநர் என்பவர் மற்றவர் போல வேடமிட்டுப் பொருந்த நடிக்கும் கலைஞர்.  இவர், ஏர்க்களம்  பாடுவோர், பார்க்கலாம் பாடுவோர், பரணி பாடுவோர் என மூவகையினர்.  இப்பாட்டில் வரும் பொருநன், 'வெண்ணித்தாக்கிய வெருவரு நோன்தாள் கண்ணார் கண்ணிக்கரி கால் வளவன்' என்று போர்க்கள வெற்றியைப் பாடுவதாலும், 'கைக்கசடு இருந்த என் கண்ணகல் தடாரி!' என்பதால் தடாரிப் பறை கொட்டுவோன் எனத் தெரிவதாலும் இவன் போர்க்களம் பாடும் பொருநன் என்று உணர முடிகிறது.     பரிசில் பெற்ற பொருநன் பரிசில் பெறாத பொருநனைக் கரிகால் வளவனிடம் ஆற்றுப்ப...