13. கார் நாற்பது கார் காலத்தைச் சிறப்பிக்கும் நாற்பது வெண்பாக்களைக் கொண்டது, "கார் நாற்பது". ' காலம் இடம் பொருள் கருதி நாற்பான் சால உரைத்தல் நானாற் பதுவே' என்று இலக்கண விளக்கப் பாட்டியல் கூறும். இதன்படி இந்நூல் காலம் பற்றியது. பாட்டியல் முதலில் காலத்தைக் குறிப்பிடுவது கொண்டு நானாற்பதில் முதலில் பிறந்த நாற்பது கார்நாற்பது என்று கருதுவர். அகப்பொருள் கூறும் கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது இது. இதனை இயற்றியவர் மதுரைக் கண்ணங் கூத்தனார். இப்பெயரைக் கொண்டு இவரது இயற்பெயர் கூத்தன். தந்தையார் பெயர் கண்ணன். சொந்த ஊர் மதுரை என்பனவற்றை அறியலாம். இவர் தம் நூலின் முதற்பாடலில், 'பொருகடல் வண்ணன் புனை மார்பில் தார் போல திருவில்' என்னும் வரியில், 'வானவில் திருமாலின் மார்பில் தவழும் மாலை போன்றது' என்று உவமிக்கிறார். பத்தொன்பதாம் பாடலில், 'நாஞ்சில் வளவன்' என்று பலராமனைக் குறிப்பிடுகின்றார். எனவே இவர் வைணவர் என்பர். எனினும் சிவனுக்குரிய கார்த்திகை விளக்கிட்டு விழாவைக் குறிப்பிடுவதால் இவ்வைணவ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.