முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொண்டரடிப் பொடியாழ்வார் - திருப்பாணாழ்வார் - குலசேகர ஆழ்வார்

  தொண்டரடிப் பொடியாழ்வார்      சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் முன் குடுமிச் சோழிய அந்தணர் குலத்தில் தோன்றியவர் தொண்டரடிப் பொடியாழ்வார்.  இவரது இயற்பெயர் விப்பிர நாராயணர்.  இவர் திருவரங்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து, திருமாலுக்குப் பூமாலைகளையும், துளசி மாலைகளையும் சமர்ப்பித்துப் பெரியாழ்வாரைப் போல மலரத் தொண்டாற்றி வந்தார்.     உறையூரில் சோழன் அவையில் ஆடல் நிகழ்த்திப் பெரும் பரிசு பெற்றுத் திரும்பிய தேவதேவி என்னும் தாசி, இவரது நந்தவனத்தில் தற்செயலாகத் தங்க நேர்ந்தது.  இவர் தேவதேவியின் அழகைப் பொருட்படுத்தாததைக் கண்டு, தன்  அழகில் கர்வம் கொண்ட தேவதேவி இவரை வசப்படுத்திக் காட்டுவதாகச் சபதம் செய்தாள் .  அதன்படி இவரது நந்தவனத்தில் குற்றேவல் செய்பவளாய்ச் சென்ற தேவதேவி ஒரு மழைக்காலத்து இரவில் விப்பிர நாராயணரை அணுகி, அணைத்துத்தன் சபதத்தில் வெற்றி பெற்றாள் .  விப்பிரநாராயணரின் பொருள் குறைந்ததும், தேவதேவி அவரை விட்டு விலகினாள் .  திருமால் பக்தரான விப்பிர நாராயணர் தேவதேவியின் பக்தராகி அவள் இல்லத்து முன் காத்து நின்றார்.  ...

நம்மாழ்வார் - மதுரகவியாழ்வார் - திருமங்கையாழ்வார்

  நம்மாழ்வார்      ஆழ்வார்களுள் மிகவும் போற்றப்படுபவர், நம்மாழ்வார்.  இவர் மாறன் காரிக்கும், உடைய நங்கைக்கும் மகவாகத் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரில் பிறந்தார்.  பிறப்பு முதலே யோகத்தில் ஆழ்ந்து பதினாறாண்டுகள் ஒரு புளிய மரத்தடியில் இருந்தார்.  இவருக்குச் சடகோபன், காரிமாறன், வகுளாபரணன், பராங்குசன் என்னும் பெயர்கள் உள்ளன.     இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு.  இந்நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் அமைச்சராய்த் திகழ்ந்த மாறன் காரியே நம்மாழ்வாரின் தந்தை எனவும் கூறுவர்.  நம்மாழ்வார் 35 ஆண்டுகள் வாழ்ந்தனர் எனது தெரிகிறது.     மதுரகவி வடநாட்டில் அயோத்தியில் இருந்தபோது நம்மாழ்வார் தோற்றத்தை அறிந்து தென்னாட்டுக்கு வந்தார்.  இவர் நம்மாழ்வாருக்குச் சேவை செய்து, ஆழ்வார் அருளிய திருவாய் மொழியை ஓலைச் சுவடியில் எழுதி வைத்தார்.     நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, திருவாசிரியம், திருவிருத்தம், பெரிய திருவந்தாதி ஆகியன முறையே சாமவேதம், யஜுர் வேதம், ரிக்கு வேதம், அதர்வண வேதம் ஆகியவற்றின் சாரம...

திருமழிசையாழ்வார் - பெரியாழ்வார் - ஆண்டாள்

     காஞ்சிபுரத்துக்கு அருகேயுள்ள திருமழிசையில் பார்க்கவர் என்னும் முனிவரின் புதல்வராக அவதரித்தவர் திருமழிசையாழ்வார்.  இவரைப் பக்திசாரர் என வழங்குவர்.  இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர்.     திருமழிசையாழ்வார் முதலாழ்வார்களைப் போலச் சமயப் பொறையுடையவர் அல்லர்.  இவர் சமய வாதம் செய்து பிற சமயத்தினரை வென்றார்.  தம் பாடல்களிலும் பிற சமயத்தினரைக் கண்டித்தார். 'அறியார் சமணர் அயத்தார் பௌத்தர்  சிறியார் சிவப் பட்டார்கள்.'   'நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று ஒராதார்  கற்கின்ற தெல்லாம் கடை' என வரும் பாடல்கள் இவர் மறந்தும் புறந்தொழா மகான் என்பதை நிறுவும்.     இவர் 'திருச்சந்த விருத்தம்' 'நான்முகன் திருவந்தாதி' ஆகியன இயற்றியுள்ளார்.  திருமால் சொல்லாய்.  பொருளாய், சொல்ல முடியாத சோதியாய், எல்லாமாய் இருக்கும் இயல்பை உரைக்கும் திருச்சந்த விருத்தப் பாடலை இங்கே காண்போம்.  ' சொல்லினால் தொடர்ச்சிநீ      சொல்லப்படும் பொருளுநீ  சொல்லினால் சொலப்படாது      தோன்றுகின்ற சோதிநீ...

பொய்கையாழ்வார்- பூதத்தாழ்வார் - பேயாழ்வார்

பொய்கையாழ்வார்      திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் பொய்கையாழ்வார்.  இவர் காஞ்சிபுரத்தில் ஒரு மலரில் அவதரித்ததாகக் கூறுவர்.  இவர், சேரமான் கணைக்கால் இரும் பொறையைச் சிறை மீட்ட பொய்கையார் அல்லர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலப் பொய்கையார்.  பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள்.     திருமாலின் பாயலான ஆதிசேடன் குடை, சிங்காதனம், புணை , மணி விளக்கு முதலியனவாகப் பணி புரிவதைக் கூறும் பொய்கையார், பக்தர்களும் ஆதிசேடன் போல இறைவனுக்கும் பலவகையிலும் தொண்டாற்றவேண்டும் என்பதைக் குறிப்பால் தெரிவிக்கிறார். சென்றால் குடையாம் ; இருந்தால் சிங்காதனமாம்; நின்றால் மரவடியாம்; நீள் கடலுள் என்றும்  புணையாம் ; மணி விளக்காம் ; பூம்பட்டாம்; புல்கும்  அணையாம் திருமாற்கு அரவு.     திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைக் கழியில், மழைக்காலத்தே முதலாழ்வார்கள் மூவரும் கூடினர்.  ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் எனக் கூறி மூவரும் நின்றபோது, நான்காவதாக ஒருவர் அவர்களிடையே ...

வைணவ இலக்கியங்கள்

 வைணவம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றிய சமயம். "மாயோன் மேய காடுறை உலகம்" என்றும், " மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்  தாவா விழுப்புகழ் பூவைநிலையும்' என்றும் தொல்காப்பியம் கூறும் நூற்பாக்கள் மாயோனாகிய திருமாலின் சிறப்பை உணர்த்தும், ' கணங்கொள் அவுணர் கறந்து பொலந்தார்  மாயோன் மேயஒண் நன்னாள்; - மதுரைக் காஞ்சி    'புள்ளணி நீள்கொடிச் செல்வன்'. - திருமுருகாற்றுப்படை    'காந்தளம் சிலம்பில் களிறுபடிந் தாங்குப்  பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ' - பெரும்பாண் ஆற்றுப்படை      மேற்கண்டவாறு சங்க இலக்கியங்கள் திருமாலைப் போற்றுகின்றன.  சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவை மூலம் மாலின் மாண்பினைக் கூறும்.     சங்கம் மருவிய காலமான இருண்ட காலத்தில் களப்பிரர் ஆதிக்கத்தில் வைணவ சமயமும் ஒளி குன்றி இருண்டது.  களப்பிரர் ஆட்சியகன்று, பல்லவரும் பாண்டியரும் செந்தமிழ் நிலத்தே செங்கோலோச்சிய போது சைவம் புத்துயிர் பெற்றது போல வைணவமும் புத்துயிர் பெற்றது.     வைணவ சமயத்தை வாழ்விக்க வந்த சான்றோர்களை ஆழ்வார்கள் என்றும் ஆசார்யர்கள் என்றும் கூறு...

மாணிக்கவாசகர்

       'திருவாசகத்து உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்னும் பழமொழி எழுமளவு ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தை வழங்கியவர் மாணிக்கவாசகர்.  திருவாதவூரர் என்னும் இயற்பெயர்  பெற்று இவர் கற்றுத் தேர்ந்தவராகி, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றினார்.  வேந்தனுக்காகக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந் துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர், வழியில் குருவடிவில் திகழ்ந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப் பெற்றார்.  அதனால் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளைச் சிவாலயத் திருப்பணிக்குச் செலவிட்டார்.  இதை அறிந்த பாண்டியன் இவரைச் சிறையிட்டுத் துன்புறுத்தினான்.     இறைவன் இவர் பொருட்டு நரியைப் பரியாக்கினார்; வைகையில் வெள்ளம் வரச் செய்தார்;  பிட்டுக்கு மண் சுமந்தார்; பிரம்படியும் பெற்றார்.  இறைவனின் திரு விளையாடல்களால் மாணிக்க வாசகரின் மாண்பினை மன்னனும் மக்களும் உணர்ந்தனர்.  மாணிக்க வாசகர், மந்திரிப் பதவியை நீத்துச் சமயத்தொண்டு மேற்கொண்டு திருவாசகம் அருளினார்.  சிவபெருமானே மனித வடிவில் தோன்றி, திருவாசகம் முழுவதையும் தம் கைப்பட எழ...

சுந்தரர்

            செந்தமிழ் வல்ல சுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும், இசை ஞானியார்க்கும் தவப் புதல்வராக அவதரித்தார்.  இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர்.  நரசிங்க முனையரையர் என்னும் நாடாளும் மன்னன் இவரைத் தம் சுவிகாரப் புதல்வனாக எடுத்து வளர்த்தான்.     கைலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரரே இந்த நம்பி ஆரூரர்.  அதனால் ஆரூரர், திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் முக்கண்ணன் முதியவன் வடிவத்தில் வந்து இவரைத் தடுத்தாட்கொண்டான்.  பின், இவர் 'பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா' எனத் தொடங்கும் பாடல் முதல் பல்லாயிரம் பாடல்களால் பரமன் புகழைப் பாடினார்.     சுந்தரர், திருவாரூரில் பரவை நாச்சியாரையும், திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரையும் மணந்து கொண்டார்.  தம்பிரான் தோழன், சேரமான் தோழர், திருநாவலூரர், வான் தொண்டர், ஆளுடைய நம்பி என்னும் வேறுபெயர்கள் உண்டு.  இறுதியில் சேரமான் பெருமாள் நாயனாரோடு கைலை அடைந்தார்.     சுந்தரர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதியிலும், எட்டாம...

திருநாவுக்கரசர்

           திருஞான சம்பந்தருக்கு முன்பே தோன்றியவர், திருநாவுக்கரசர்.  முதலாம் மகேந்திரவர்மனைச் சைவ சமயம் மேற்கொள்ளச் செய்த செயலினால் இச்சான்றோரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது. திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாமூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர்.  தந்தையார் பெயர் புகழனார்.  தாயார் பெயர் மாதினியார்.  திருநாவுக்கரசரின் இளமைப் பெயர் மருள் நீக்கியார்.  பெற்றோரை இழந்த நாவுக்கரசரை இவருடைய தமக்கையார் வளர்த்து வந்தார்.     திருநாவுக்கரசர் சமண சமய நூல்களைப் பயின்று தேர்ந்து அச்சமயத்தில் சேர்ந்து பெரும் புகழ் பெற்றார்.  தருமசேனர் என்னும் புதிய பெயரும் பெற்றார்.     தம்பியார் சமண சமயம் சார்ந்தமையறிந்து சோர்ந்த தமக்கையார் 'தம்பி சைவத்திற்குத் திரும்பவேண்டும்' என்று இறைவனை வேண்டினார்.  இறைவன் அருளால் தருமசேனர்க்குச் சூலை நோய் வந்தது.  அது சமணரால் தீர்க்க முடியாததாகிப் பெரும் தொல்லை தர, இவர் தமக்கையாரை அடைந்தார்.  திலகவதியார் திருவதிகைப் பெருமானை வணங்கித் திருநீறு அண...