எட்டுத்தொகையில் புறப்பொருள் கூறும் மற்றொரு நூல் பதிற்றுப்பத்து. புறநானூறு மூவேந்தரையும், வேறுள குறுநில மன்னரையும் பாடிய பாக்களைப் பெற்றது. பதிற்றுப்பத்து சேர வேந்தர்களை மட்டுமே சிறப்பிக்கும் நூல். பத்துச் சேர மன்னர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் பாடிய பத்துப் பத்துப் பாக்களைக் கொண்டது 10 X 10 என்னும் எண்ணின் தொகையே பதிற்றுப்பத்து எனும் பெயர். இதிலுள்ள பத்துகள், முதல் பத்து, இரண்டாம் பத்து, என்று எண்ணால் பெயர் பெற்றுள்ளன. இவை யாவும் பாடாண் திணையில் அமைந்தவை. எட்டுத் தொகையில் ஒரு திணைப் பாடல்களையே கொண்ட ஒரே நூல் இதுவே. ஐங்குறு நூற்றில் தொண்டிப் பத்துப் போல இதன் நான்காம் பத்து அந்தாதி முறையில் அமைந்துள்ளது. பதிற்றுப்பத்தைத் தொகுத்தார், தொகுப்பித்தார் பெயர் தெரியவில்லை. தொகுப்பாசிரியர் சிறந்த முறையில் தொகுத்துள்ளார் என்பது தெரிகிறது. ஏனெனில் பிற தொகை நூல்களில் இல்லாத பாடல் தலைப்பு (பெயர்) இத்தொகையில் உள்ளது. பாடலில் வரும் பொருள் நயமிக்க ஒரு தொடரைப் பாடலின் பெயராகத் தொகுப்பாசிரியர் சூட்டியிர...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.