தொன்மைத் தமிழில் தோன்றிய நூல்களில் இன்று நமக்குக் கிடைப்பனவற்றுள் மிக மிகத் தொன்மையானது தொல்காப்பியம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய நூல்களுக்குக் காலத்தால் மூத்தது, தொல்காப்பியம். தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். இதனை இயற்றிய தொல்காப்பியர், அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர் என்பவர். இக்கூற்றிற்குப் போதிய சான்றுகள் இல்லை. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகத்தில் வழங்கிய பேச்சு மொழியினையும் இலக்கிய மரபினையும் ஆராய்ந்து, தமக்கு முன்னேயிருந்த இலக்கிய நூல்களைக் கற்று எழுத்து,சொல்,பொருள் பற்றி விரிவாகக் கூறும் தொல்காப்பியத்தை இயற்றினார். ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர். இந்நூல், நிலந்தரு திருவின் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியது. இச்செய்திகளைத் தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் மூலம் அறிகிறோம். சிறப்புப் பாயிரம், "மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.