வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா,கலிப்பா, பரிபாடல் என்னும் பா வகைகள் பல சங்க காலத்தில் இருந்தன. எனினும் சங்ககால இலக்கிய உலகில் தனியாட்சி செய்தது ஆசிரியப்பாவே. அதனால் தான் பிற்காலத்தார் ஆசிரியப்பாவை அரசப்பா என்றார் போலும்! சங்க கால இலக்கிய உலகில் கவிதையே அரசோச்சியது; கவிதை உலகில் ஆசிரியமே அரசோச்சியது. சங்கப் பாடல்களாக இப்போது நமக்குக் கிடைக்கும் 2381 பாடல்களில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவை ஆசிரியப்பாக்களே. ஒரு பாவே ஒரு நூலாகும் தனிச்சிறப்பு ஆசிரியமல்லாமல் வேறு பா பெறவில்லை. சங்க காலத்தில் இப்படி நூலாக வளர்ந்த ஆசிரியப் பாட்டுகளில் பத்துப் பாடல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றையும் ஒரு தொகையாகக் கருதி, 'பத்துப்பாட்டு' என வழங்கும் மரபு ஏற்பட்டது. இவற்றை ஒன்பது புலவர்கள் இயற்றியுள்ளனர். (நக்கீரர் இருவர் என்பதால் புலவர் தொகை ஒன்பதாகிறது.) பத்துப் பாடல்களின் பெயரை ஒரு வெண்பா தருகிறது. முருகு பொருநாறு பாண் இரண்டு முல்லை பெருகு வள மதுரைக் காஞ்சி-மருவினிய ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.