நக்கீரர் இயற்றிய அகப்பொருள் பாடல் ' நெடுநல் வாடை'. இது 188 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா. இப்பாடலைப் பாடிய நக்கீரர் சங்க காலத்துச் சான்றோர் என்பது உறுதி. தலைவனைப் பிரிந்து வருத்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழி (யுகம்) போல நெடியதாகி வருத்தும் வாடைக் காலம்; பகை ஒருபுறம் இருக்க, மறுபுறம் தலைவியோடு போகம் நுகர்வதை வெறுத்த தலைவன் பகைவன் இருக்கும் வேற்று நாட்டுக்குச் சென்று வெற்றி என்னும் நல்ல விளைவைப் பெறக் காரணமான வாடை-இவ்வாறு நெடுநல் வாடை என்பதற்கு நச்சினார்க் கினியர் காரணம் கூறுவர் . பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தது போன்று அல்லலுறும் அன்றிலைப் போன்ற தலைவிக்குப் பிரிந்த ஒரு பொழுதும் ஓர் ஊழியாய் நீளல் இயற்கையே. துன்பம், எதிர்பார்ப்பு, ஐயம் முதலிய உணர்வுகள் நிறைந்த ஒரு நாளுக்கும் 24 மணி நேரந்தான்: எனினும் அது 240 மணி நேரம் போலத் தோன்றுவதை அனைவரும் எப்பொழுதேனும் அனுபவித்தே இருப்பர். நேச நாடுகள் ஜெர்மனியில் படை வீரரை இறக்கிய இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய நாளைக் குறித்த நாவலுக்கு The Longest Day...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.