முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 8, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நாக குமார காவியம்

      ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கில் நாககுமார காவியம் என்னும் பெயரைக் காண்கின்றோம்.  இந்நூலாசிரியர் சமண சமயத்தவர் என்னும் ஒன்றைத் தவிர இவரைப் பற்றிய வேறு செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை; நூலைப் பற்றிய செய்திகளும் கிடைக்கவில்லை.பிற காப்பியச் செய்யுள்களை மேற்கோளாகக் காட்டிய உரையாசிரியர்கள் இக்காப்பியப் பாடலை மேற்கோளாகக் காட்டாததும், பிற காப்பியச் செய்யுள்களைத் தன்னகத்தே கொண்ட புறத்திரட்டில் இக்காப்பியச் செய்யுள் ஏதும் காணப் படாமையும் விந்தையே!

நீலகேசி

     கேசி என்னும் பெயரில் முடியும் நூல்கள் யாவும் சமய வாதத்தைக் கூறும் நூல்களே.  குண்டலகேசி, அஞ்சனகேசி, காலகேசி ஆகியனவும் சமயத் தருக்க நூல்களே.  நீலகேசியும் ஒரு சமயத் தருக்க நூல்.  இதனை யாப்பருங்கல விருத்தி உரை 'நீலம்' எனச் சுருக்கிக் கூறுகின்றது.  இந்நூலுக்கு 'நீலகேசித் திரட்டு' என்னும் பெயரும் உண்டு.  இந்நூல் 894 விருத்தப்பாக்கள் கொண்டது.     இந்நூலாசிரியர் ஒரு சமணர் என்பதை அறிகிறோமே தவிர, அவருடைய பேர், ஊர், முதலிய விபரங்கள் கிடைக்கவில்லை.  இந்நூலில் அத்வைதம் முதலிய பிற்காலச் சமயங்களைப் பற்றிக் கூறவில்லை.  எனவே இந்நூல் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுக்கு முன்னே தோன்றியிருக்கலாம் என்பர்.  நீலகேசி பௌத்தர்களுடனே அதிகமாக வாதிடுகிறாள்; இக்காலத்தே பௌத்தம் செழித்திருக்க வேண்டும்.  எனவே "கி.பி. ஏழாம் நூற்றாண்டில் ஹுவான் சுவாங் பௌத்த மதம் தமிழ் நாட்டில் குன்றிய நிலையைக் காண்பதற்கு முன்னர் நீலகேசி தோன்றியிருக்க வேண்டும்" என்பர். தெ . பொ . மீ. "இந்நீலகேசி ஆறாம் நூற்றாண்டினனாகிய மகேந்திரவர்மன் காலத்திற்கு அணித்தாக முந்திய ஐந்தாம் நூற...

உதயணகுமார காவியம்

     உதயண குமார காவியத்தின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை.  இக்காப்பியம் கொங்கு வேளிரின் 'பெருங்கதை ' கூறும் உதயணன் வரலாற்றையே கூறுகின்றது.  பெருங்கதையின் உதயணன் வரலாறு, வடமொழியிலுள்ள 'பிருகத்கதாமஞ்சரி', 'கதாசரித சாகரம்'ஆகிய நூல்களிலும், பைசாச மொழியில் அமைந்த 'பிருகத்கதா' என்னும் நூலிலும் உள்ளது.     பெருங்கதைப் பெரியதாகவும்    அகவற்பாவிலும் அமைந்தது. அதற்கு ஒரு சுருக்கப் பதிப்பு வெளியிடுவது போல் இந்நூலாசிரியர் உதயணன் கதையைச் சுருங்கிய அளவில் விருத்தப்பாவில் இயற்றினார்.இதன் கண் உஞ்சைக் காண்டம், இலாவண காண்டம், மகதகாண்டம், வத்தவ காண்டம், நரவாகன காண்டம், துறவுக்  காண்டம் ஆகிய ஆறு காண்டங்கள் உள்ளன.காப்பியத்துள் மொத்தம் 367 செய்யுள்கள் உள்ளன.     வத்தவ நாட்டின் கௌசாம்பி நகரத்து அரசன் உதயணன்.  அவனை அவந்தி நாட்டு மன்னன் பிரச்சோதனன் என்னும் அரசன் மாய யானையின் மூலம் சிறைப்படுத்துகின்றன.  உதயணன் நண்பனும் அமைச்சனுமான யூகி என்பான், அவன் சிறை மீளத் துணை செய்கிறான்.  பிரச்சோதனன் மகள் வாசவ தத்தைக்கு யாழ் சொல்லிக் கொடுக்கும் உதயணன...