' தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடினார் நாமக்கல் கவிஞர். தமிழனைத் தலைநிமிர்த்தி நிற்குமாறு செய்வதே சங்க இலக்கியந்தான். இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும், காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கற்பனைக் கலப்பின்றிப் படம் பிடிக்கும் அற்புதக் கண்ணாடியே சங்க இலக்கியம். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததையும், முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததையும், அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்து சிறந்ததையும், உரைக்கிறது சங்க இலக்கியம். அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிவுற்றதையும், அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்தத்தையும், மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததையும், அவர் தங்கமதலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியதையும் விழுமியமுறையில் விளக்குவது சங்க இலக்கியம். பண்டைய தமிழ் நாட்டின் மண்ணையும் விண்ணையும், மக்களையும், மாக்களையும், பயிர்களையும், உயிர்களையும், மலையையும், கலையையும் அவற்றின் தோற்றத...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.