நற்றிணைப் பாடல்களிலும் நெடிய பாடல்களைக் கொண்ட தொகை நூல் அகநானூறு. இதன் பாடல்களின் அளவு சிறுமை 13 அடி. பெருமை 31 அடி. இந்நூல் நெடுந்தொகை நானூறு என்னும் பெயரையே முதலில் பெற்றிருந்தது. இத்தொகை நூலின் பாயிரமும் 'முன்னர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு' என்று குறிப்பிடுகிறது. அகநானூற்றுப் பாயிரத்தை இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்வதரையன் பாடியுள்ளான். பின்னர் அது அகம், அகப்பாட்டு, அகநானூறு என வழங்கப்பட்டது. நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தோன் உப்பூரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன். பூரிக்கோவும் உருத்திரசன்மனும் ஒருவரே என்பதை முன்னர்க் கண்டோம். குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களைத் தொகுத்த பின்னர், அந்த அனுபவ முதிர்ச்சியால் உருத்திரசன்மன் இத்தொகை நூலை முப்பிரிவுகளாகப் பிரித்ததோடு குறிப்பிட்ட எண் பெற்ற பாடல் குறிப்பிட்ட திணை பற்றிய பாடலாக அமையுமாறு செய்தான். 1 முதல் 120 பாடல்கள், 'களிற்றி யானை நிரை' எனவும் 121 முதல் 300 வரையுள்ள 180 பாடல்கள் ' மணிமிடைபவளம்' எனவும், ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.