நம் தமிழ் இலக்கியங்களின் தோற்றம் மற்றும் அதன் வகைப்பாடு, சங்க காலம் முதல் வரிசைப் படுத்தி எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாறு.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார். திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல். நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள். எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர். 'நாலடி' என்பதும் இதன் பெயரே. இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது. நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது. பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது. இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...
கருத்துகள்
கருத்துரையிடுக