முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவரங்க கலம்பகம் மற்றும் நந்தி

வைணவ சமயத்தைச் சார்ந்த கலம்பக  நூல்களில் சிறப்பு மிக்கது 'திருவரங்கக் கலம்பகம்'. இதை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இவர் கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் 'திவ்ய கவி' என்னும் சிறப்புப் பெயரும், 'அழகிய மணவாளதாசர்' என்னும் வேறு பெயரும் இவருக்கு உண்டு. இவர் இயற்றிய எட்டு நூல்களை இணைத்து 'அஷ்டப் பிரபந்தம்' எனக்கூறுவர். 'அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வை உரைக்கும் 'திருவரங்கக் கலம்பகம்' அஷ்டப் பிரபந்தம் என்னும் எட்டு நூல்களில் ஒன்றாகும்.                       


இக்கலம்பகத்தில் 'மறம்' என்னும் உறுப்பில் அமைந்த பாடல், புலவர் மாலிடம் கொண்ட மாறாக் காதல்,மறம்,நகைத்திறம் ஆகிய மூன்றும் கலந்த முடி மணியாக ஒளி விடுகின்றது.


மதுரை கலம்பகம் 


மதுரை சோமசுந்தரக் கடவுள் மீது குமரகுருபரர் பாடியது 'மதுரை கலம்பகம்'. இந்நூலின் சிறப்புணர 'அம்மானை' என்னும் உறுப்பில் அமைந்த பாடலைப் பார்ப்போம்.


அம்மனை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டுகளில் ஈடுபட்ட மூன்று பெண்களில் ஒருத்தி, 'சிவபெருமான் வென்றான்' என்கின்றாள். மற்றொருத்தி 'வெற்றி பெற்ற சிவனிடம் உடல் இரு கூராகிவிட்டது ஏன்?' என்று கேட்கிறாள்.மூன்றாம் பெண்மணி, 'உடல் இரு கூரானாலும் அவருக்குக் காயம் இல்லை' என்று பதிலுரைக்கின்றாள்.

  

                         இவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார் 
                         விருதுகட்டி அங்கம்வெட்டி வென்றனர் காண 
                                                                                                        அம்மானை 
                          விருதுக்கட்டி ஆங்கம் வெட்டி வென்றாரே யாமாகில் 
                          அருமையுடன் பொன்றிரு கூறுவதேன் அம்மானை.
                          ஆனாலும் காயமிலை ஐயரவர்க் கம்மானை.  

                                                                                 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...