முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 29, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பரிபாடல்

      "எட்டுத் தொகையுள் அகப்பொருள், புறப்பொருள் என்னும் இரு பொருளையும் கூறும் ஒரே நூல், பரிபாடல்.  பாட்டு வகையில் ஒன்றே பரிபாடல்.  "இது தொகை நிலை வகையால் பா என்று சொல்லப்படும் இலக்கணம் இன்றி எல்லாப் பாவிற்கும் பொதுவாக நிற்றற்கு உரியதாய், இன்பப் பொருளைப் பற்றிக் கூறும்.  இது, இருபதடிச் சிறுமையும் 400 அடிப் பெருமையும் பெற்று வரும்"என்று பரிபாடலை விளக்குகிறது, தொல்காப்பியம்.  தொல்காப்பியருக்குப் பின்னே புறப்பொருளும் பரிபாடலில் பாடப்பெற்றது.  அத்தகைய பாடல்கள் இந்நூலில் உள்ளன.  உறுதிப் பொருள் நான்கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு மலை விளையாட்டு, புனல் விளையாட்டு முதலியவை பற்றி இப்பாடல் வரும் என்பர் பேராசிரியர்.  இது தெய்வ வாழ்த்து உட்படக் காமப்பொருள் குறித்து உலகியலைப் பற்றி வரும் என்பர் நச்சினார்க்கினியர்.  மலையும் யாறும் ஊரும் பரிபாடலில் வருணிக்கப்படும் என்பர், இளம்பூரணர்.      பரிபாடலில்  70 பாடல்கள் உள்ளன என்று இலக்கண உரைகள் கூறுகின்றன.     திருமாற்கு இருநான்கு; செவ்வேட்கு முப்பத்(து)     ...