சங்ககாலத்துக்குப் பின்னே தோன்றிய காப்பியங்கள் யாவும் சமயக் காப்பியங்களே. பெரிய புராணமும் ஒரு சமயக் காப்பியம்; சைவக் காப்பியம்; மற்றக் காப்பியங்கள் வடமொழித் தழுவலாக வந்த காப்பியங்கள். பெரிய புராணமோ, சிலப்பதிகாரம், மணிமேகலை போலத் தமிழ் நாட்டின் சொந்தக் காப்பியம்; தமிழக வரலாற்றுக் காப்பியம். காப்பியக் கவிஞர் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார். தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றியவர், செங்குட்டுவன் என்னும் சேரமன்னனின் தம்பி. சைவத்தின் முதல் தமிழ்க் காப்பியத்தை இயற்றிய சேக்கிழாரோ இரண்டாம் குலோத்துங்கன் என்னும் சோழ மன்னனின் முதலமைச்சர்; இளங்கோ அரசைத் துறந்து அடிகளானபிறகு காப்பியம் இயற்றினார்.' சேக்கிழார் காப்பியம் இயற்றியப் பிறகு அமைச்சைத் துறந்து அடிகளானார் ; சேக்கிழாரடிகள் என அழைக்கப் பெற்றார். சைவத்துக்குக் கற்கோயிலாகப் பெரிய கோயில் அமைத்த இராசராசனின் இயற்பெயர், அருள்மொழித் தேவன். சைவ சமயத்துக்குச் சொற்கோயிலாகப் பெரிய புராணம் இயற்றிய சேக்கிழாரின் இயற்...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.