4. பெரும்பாண் ஆற்றுப்படை காஞ்சிக் காவலனாக தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசு பெற்ற பெரும்பாணன், பரிசு பெறாத பாணனை அவனிடம் ஆற்றுப் படுத்துவதாகக் கற்பித்துக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடியது, 'பெரும்பாண் ஆற்றுப்படை', இப்பாடல் சரியாக அரை ஆயிரம் அடி (500) பெற்ற ஆசிரியப்பா. இது சிறுபாண் ஆற்றுப்படையை விடப் பெரிய பாடலாகத் திகழ்வதால் பெரும்பாண் ஆற்றுப்படை எனப்பட்டது என்பர். பாடலில் வரும் யாழ்ப்பாணம், 'இடனுடைப் பேரியாழ் முறையுளி' இசைத்ததாக வருகிறது. சீறியாழ் கொண்டவன் சிறுபாணன் என்பது போல், பேரியாழ் கொண்டவன் பெரும்பாணன் எனப்பட்டான். எனவே இது பெரும்பாண் ஆற்றுப்படை எனும் பெயர் பெற்றது. பாணரில் சிறுபாணர், பெரும்பாணர் எனும் இரு பிரிவினர் இருந்தமையினை, 'பெரும்பாணர் - குழவர் பாணர் முதலாகிய பெரிய இசைக்காரர்" என்னும் அடியார்க்கு நல்லார் உரையாலும் நன்கு அறியலாம். இப்பாடலைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார் பத்துப்பாட்டுள் இடம் பெறும் பட்டினப் பாலையினையும், இயற்றியுள்ளார். எனவே இளந்திரையன், கரிகாலன் காலத்துக்...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.