முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே 9, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரைக் காஞ்சி ,முல்லைப்பாட்டு

  புறப்பொருளில் காஞ்சித் திணை  6. மதுரைக் காஞ்சி      தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு வீடு பேறு உணர்த்துவதற்காக பல்வேறு நிலையாமைகளை அறிவுறுத்தி மாங்குடி மருதனார் பாடியது, மதுரைக்காஞ்சி.  இது 782 அடிகள் கொண்டது.  பத்துப்பாட்டில் இதுவே மிகப் பெரிய பாடல் எனவே, 'பெருகு வளமதுரைக் காஞ்சி' என்று சிறப்பிக்கப் பட்டது.  இது வஞ்சி அடிகள் விரவி வந்த ஆசிரியப்பாவால் அமைந்தது.     'மதுரைக் காஞ்சி' என்பதற்கு மதுரை நகரின்கண் மன்னனுக்கு உணர்த்திய காஞ்சித்திணை என்பது பொருள்.  முல்லைத்திணை பற்றிய பாடல் முல்லைப்பாட்டு என வழங்கப்பட்டது போல இதுவும் திணையால் பெயர் பெற்று 'காஞ்சிப்பாட்டு' என வழங்கத்தக்கது.  புறத்திணையின் பெயரால் அமைந்தது, பத்துப்பாட்டில் இது ஒன்றே.     காஞ்சி என்பது புறத்திணைகளில் ஒன்று 'காஞ்சி தானே பெருந்திணைப் புறனே' என்பது தொல்காப்பியம். பாங்கரும் சிறப்பின் பல்லாற்றானும்  நில்லா உலகம் புல்லிய நெறித்தே  என்ற  இதன் இலக்கணத்தைத் கூறுகிறார்.  தொல்காப்பியர், 'தனக்கு நிகரற்ற வீடுபேறு ப...