முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 10, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கம்பராமாயணம்

"கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க்  கம்பன் பிறந்த தமிழ்நாடு"      செந்தமிழ் நாட்டின் சிறப்புகளைக் கூற வந்த பாரதியார், கம்பன் பிறந்ததால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருமையுற்றதைக் கூறுகிறார்.  கம்பர் தமிழ் இலக்கிய உலகை ஒளியுறச் செய்த உதய சூரியன்.  ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாக்கவிஞர்; மற்றக் கவிஞர்கள் இவர் முன் குன்றுகளாகக் குன்றிப் போக இமயமாக எழுந்து நிற்கும் புலவர் திலகம், கம்பர்.   ' கல்வியிற் பெரியவர் கம்பர்' 'கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்' 'கம்ப நாடகம்' 'கம்ப நாடன் கவிதையிற் போல்  கற்றோர்க்கு இதயம் களியாதே '     என்னும் பழமொழிகளும், பாடல் வரிகளும் கம்பரின் அளப்பரிய கவிப் புலமையை உரைக்கின்றன.  மானுடனாக வால்மீகி  சித்தரித்த இராமனை ஆண்டவராகக் காட்டி மனித குலத்தைப் புனிதப்படுத்திய புதுமைப் புதுமைப் புலவர் கம்பர்.  கவிச் சக்கரவர்த்தியிடம் , 'மன்னவனும் நீயும், வளநாடும் நின்னதோ ' என்று சீறிப் பேசும் தன்மானத் தந்தை கம்பர்.  எண்ணரிய புலவர்கள் விளங்கும் இலக்கிய உலகிலே பன்மீன் நாப்பண்...