முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 8, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருமந்திரம் - முத்தொள்ளாயிரம்

திருமந்திரம்        'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'     தமிழரின் தலையாய கொள்கையை விளக்கும் இத்தொடரை அறியாதார் தமிழுலகில் இலர்.  இவ்வுரை பெற்ற நூலே தமிழ் மந்திரம் எனச் சிறப்பிக்கப் பெறும் 'திருமந்திரம்'.  இதனை இயற்றியவர் திருமூலர்.  இவரைத் திருமூல நாயனார் என வழங்குவர்.     திருமூலர், திருக்கயிலையில் நந்தியின் திருவருள்பெற்ற சிவயோகியருள் ஒருவர்.  எண் பெருஞ்சித்தி கைவரப்பெற்ற சித்தர்; செந்தமிழ் பக்தர்; திருவாவடுதுறைக் கோயிலில் உள்ள அரசமரத்தடியில் மூவாயிரம் ஆண்டு சிவயோகத்தில் அமர்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல் பாடியவர்.  இக்குறிப்புகளைப் பெரிய புராணம் தருகிறது.  திருமந்திரம் நூலில் வரும் பாடல்கள் சிலவும் இவற்றிற்கு அகச்சான்றாய் நிற்கின்றன.  திருமூலர் நெடுங்காலம் வாழ்ந்த சான்றோர் என்பதில் ஐயம் இல்லை.     திருமந்திரம் நூலில் ஒன்பது தந்திரங்கள் உள்ளன.  இவை 232 அதிகாரங்களாகப் பகுக்கப் பட்டுள்ளன.  இவற்றுள் உள்ள பாடல்கள் மூவாயிரம்.  'மூலம் உரைசெய்த மூவாயிரத் தமிழ்' என்பது பாயிரக் கூற்று...

காரைக்கால் அம்மையாரின் நன்னூல்கள் நான்கு

  சோழ நாட்டுக் கீழைக் கடற்கரையைச் சார்ந்த ஊர் காரைக்கால்.  இன்று இது புதுவை மாநிலத்தோடு இணைந்துள்ளது.  இக்காரைக்காலில் செல்வம் செழித்த வணிகன் மகளாகப் பிறந்தவர் புனிதவதியார்.  இவர் பரமதத்தன் என்னும் வணிகனை மணந்தார், புனிதவதியார்.  இவர் பரமதத்தன் என்னும் வணிகனை மணந்தார்.  புனிதவதியார் இறைவன் திருவருள் பெற்றவர் என்பதை அறிந்து மருண்ட பரமதத்தன் அவரை நீத்துப் பாண்டிய நாட்டுக்குச் சென்று மற்றொரு பாவையை மணந்து வாழ்ந்தான்.  உறவினர் புனிதவதியாரைப் பரமதத்தனிடம் அழைத்துச் சென்றபோது அவன் மனைவியைத் தெய்வம் எனக்கூறி அவள் திருவடி தொழுதான்.  அதனால் பெரு நாணமுற்ற புனிதவதியார் இல்லறம் துறந்து, நல்லெழில் துறந்து சிவபெருமானை வேண்டிப் பேய் உருவம் பெற்றார்.  இவர் கயிலைக்குச் சென்றபோது அம்மையப்பனான சிவன், 'அம்மையே' என்று இவரை அழைத்தான்.  அம்மையார் வட திருவாலங் காட்டுக்குத் திரும்பி வந்து, ஆடும் பெருமானின் திருவடி நிழலில் என்றும் இருந்து இன்புற்றார்.  இவரே காரைக்கால் அம்மையார் என வழங்கப் பெற்றார்.     காரைக்கால் அம்மையாரின் இவ்வரலாற்றைச் சேக்கிழார...

திணைமாலை நூற்றைம்பது - கைந்நிலை

  17. திணைமாலை நூற்றைம்பது      திணைக்கு முப்பது பாடல் வீதம் ஐந்திணைக்கு நூற்றைம்பது பாடல்களை மாலை போலக் கொண்ட நூல் என்னும் பொருளில், 'திணைமாலை நூற்றைம்பது' எனப் பெயர் பெற்றது, இந்நூல்.  இதில் திணைகள் குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் எனும் முறையில் அமைந்துள்ளன.  திணைக்கு முப்பது பாடல் என்பதற்குப்  பதில் குறிஞ்சி, நெய்தல், முல்லை ஆகிய மூன்றும் 31 பாடல்களைப் பெற்றுள்ளன.  எனவே 153 பாடல்கள் உள்ளன.  மிகையான மூன்று பாடல்கள் பின்னே புகுத்தப்பட்டவை என உணரலாம்.  கீழ்க்கணக்கில் உள்ள அகப்பொருள் நூல்களில் மிகவும் பெரியது இதுவே.     ஏலாதியை இயற்றிய கணிமேதாவியாரே இந்நூலையும் இயற்றினார்.  இவர், மாக்காயனாரின் மாணாக்கர் - சமணர் - கி.பி.ஐந்தாம் நூற்றாண்டினர் என்பவற்றை முன்னரே கண்டோம்.     பொருட் செறிவும் பா நயமும் மிக்க இந்நூலின் பல பகுதிகள் பிற்கால நூல்கள் பலவற்றோடு ஒப்புமை உடையன.  இப்பிறப்பில் செய்த தீவினை, நல்வினைப் பயன் மறுபிறப்பில் அவனை அடையும் என்பது பொது நம்பிக்கை.  கணிமேதாவியாரோ, 'இம்மையில் செய்த தன் பயன் ...

திணைமொழி ஐம்பது - ஐந்திணை எழுபது

  15. திணைமொழி ஐம்பது      இந்நூல், ஐந்திணை ஐம்பது போலவே திணைக்குப் பத்துப்பாடல் வீதம் ஐம்பது பாடலைக் கொண்டது.  எனவே திணைமொழி ஐம்பது எனும் பெயர் பெற்றது.  திணை வரிசை, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என அமைந்துள்ளது; ஐம்பது பாடல்களில் 46 இன்னிசை வெண்பாக்கள்; எஞ்சிய நான்கே நேரிசை வெண்பாக்கள்.     இந்நூலாசிரியப் பெயர் கண்ணஞ் சேந்தனார்.  இவர் சாத்தந்தையாரின் புதல்வர்.  புறநானூற்றில் சோழன் போரவைக் கோப்பெருநற் கிள்ளியைப் பாடிய சாத்தந்தையாரே கண்ணஞ் சேந்தனாரின் தந்தையார் என்று, டாக்டர். உ.வே. சாமிநாதையர் குறிப்பிட்டார்.  அதனைப் பலரும் மறுத்து, இவர் இருண்ட காலத்துப் புலவரே அல்லாமல் சங்கத்துச் சான்றோர் அல்லர் என்பர்.  கார் நாற்பதின் ஆசிரியர் கண்ணங் கூத்தனாரும், இந்நூலாசிரியர் கண்ணஞ் சேந்தனாரும் உடன் பிறந்தார் ஆகலாம் எனப் பெயர் ஒற்றுமை கண்டு கூறுவோர் உண்டு, சேந்தனார் வைணவ, சைவ வேறுபாடு கருதாத ஒரு வைதிகர்.      சேந்தனாரின் செந்தமிழ்ப் புலமை அறிய, ஒரு பாடலை நோக்குவோம்.  'இரவுக் குறி விலக்கி வரைவு கடாயது' என்னும் ...