குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை. திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம். சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர். இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு' எனவும் வழங்கப்பட்டது. எனினும் 234 ஆம் பாடல் எனச் சிலரும், இறையனார் அகப் பொருள் உரையில் மேற்கோளாக வரும், 'சான்றோர் வருந்திய வருத்தமும்' எனத் தொடங்கும் பாடலே மறைந்து போன நற்றிணைப் பாடல் எனச் சிலரும் கூறுவர். 385 ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போனது. 56 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரியவில்லை. நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி. தொகுத்தவர் பெயர் ஏட்டில் இல்லை. நற்றிணையை 1914-இல் உரை எழுதிப் பதிப்பித்தவர், பி...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.