முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன் 1, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான்மணிக்கடிகை -இன்னா நாற்பது -இனியவை நாற்பது

  3.  நான்மணிக்கடிகை      நன்கு உயரிய மணிகளாய் இயன்ற ஒரு வகை அணிகலன் போல நான்கு நீதிமணிகளால் இயன்ற அற அணியே இந் நான்மணிக்கடிகை .  இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.  விளம்பி என்பது ஊர்ப்பெயர்.  இவர் வைணவர் என்பது இந்நூலில் உள்ள இரண்டு கடவுள் வாழ்த்துப் பாடலால் உறுதியாகிறது.  இவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இருந்திருத்தல் வேண்டும் என்பர், டி .வி. சதாசிவ பண்டாரத்தார்.  இந்நூல் தொல்காப்பியர் கூறும் 'அம்மை' எனும் வனப்பு பெற்றது.      இந்நூலில் இரண்டு கடவுள் வாழ்த்துச் செய்யுள் உட்பட மொத்தம் 104 பாடல்கள் உள்ளன.  நான்கு சிறந்த கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து அவற்றிடையே ஓர் இயல்பு தோன்றப் பாடியிருக்கும் விளம்பி நாகனாரின் புலமை போற்றத் தக்கது.  அணி என்பன நான்கும் ஒரு பாடல். இல்லை என்பன நான்கும் ஒரு பாடல், அணி என வருபவை நான்கு மாணிக்க மணிகளால் ஓர் அணி,  நான்கு மரகத மணியால் ஓர் அணி என்று இனப்படுத்திச் செய்த அணிகலன்கள் போல ஒருமையும் பெருமையும் மிக்கனவாய்த் திகழ்கின்றன.  இல்லை என வரும் பாடலை இங்கே காண்க. கண்ணின் சிறந...

2.நாலடியார்

           பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார்.  திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல்.  நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள்.  எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர்.     'நாலடி' என்பதும் இதன் பெயரே.  இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது.  நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது.  பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற  நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது.  இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...