முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முத்தமிழ் வளர்த்த முச்சங்கம்

     நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள்.  சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர்.  அவருள்ளும்  பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர்.  இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப்  பின்வரும் சான்றுகள் விளக்கும். "வீயாத் தமிழுடையான்  பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"           - யாப்பருங்கலக் காரிகை மேற்கோள் செய்யுள்  "பாடு தமிழ் வளர்த்த கூடல் "            -புறத்திரட்டு  "சோமன் வழிவந்த பாண்டிய நின்  நாடுடைத்து நல்ல தமிழ்"           திருமுருகாற்றுப்படை உரையில் நச்சினார்க்கினியர் வழங்கும் மேற்கோள் . "வித்த யாண்ட விளம்பழையன் மாறனையும்"           -பதிற்றுப்பத்து பதிகம்       பாண்டிய மன்னர்கள் தம் தலைநகரில் ச...

புறநானூறு

           எட்டுத்தொகை நூல்களில்  தமிழர்  மிகவும் ஏற்றிப் போற்றும் தனிச் சிறப்புப் பெற்றது.  புறநானூறு கடவுள் வாழ்த்து உட்படப் புறப்பொருள் பற்றிக் கூறும் நானூறு பாடல்கள் கொண்டதால் இது இப்பெயர் பெற்றது.  இந்நூலைப் புறம்,   புறப்பாட்டு , புறம் நானூறு எனும் வேறு பெயர்களாலும் குறிப்பிட்டார்கள். புறநானூற்றுப் பாடல்களின் அடிவரையறை கூற முடியாதவாறு பல பாடல்கள் சிதைந்து உள்ளன. 267, 268 ஆகிய இரு பாடல்கள் முற்றிலும் மறைந்து விட்டன.      இந்நூலைப் பாடியோர் ஒரு நாட்டார் அல்லர்;  ஒரு காலத்தார் அல்லர்; ஒரு சமயத்தார் அல்லர்; இவர்கள் தமிழகம் முழுவதும் பரவியிருந்த பல்வேறு நிலையில் வாழ்ந்த புலவர்கள். வேந்தன் முதல் வெண்ணிக் குயத்தி ஈறாகப் பல்வேறு சமூக நிலையில் இருந்த ஆடவரும் மகளிருமான 157 புலவர் பெருமக்கள் பாடிய பாக்களைக் கொண்ட நூல் இது.  முதற் சங்க காலத்தைச்  சேர்ந்த முரஞ்சியூர் முடி நாகராயர் பாடலே கடவுள் வாழ்த்துக்கு அடுத்த பாடலாக நூலின் முதல் பாடலாக அமைந்துள்ளது .      இந்நூலைத் தொகுத்தார், தொகுப்பித...

கலித்தொகை

           முன்னே கண்ட நான்கும் (குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு) ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் தொகை நூல்கள்.  கலித்தொகை கலிப்பாவால் அமைந்தது.  கலிப்பாவும், பரிபாடல் என்னும் பாவும் அகப்பொருள் பாட ஏற்றவை என்கின்றது, தொல்காப்பியம். " நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கினும் கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும் உரியதாகும் என்மனார் புலவர்"      இச் சூத்திரத்தால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே அகப்பொருள் இலக்கியத்தில் கலிப்பாவும் பரிபாடலும் முதன்மை பெற்றிருந்தன என்பது தெரிகிறது.  இவ்விரண்டும் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் உறுப்புகள் கொண்டவை.  இவை இரண்டும் "வெண்பா நடைத்து" என்பர் தொல்காப்பியர்.  இவற்றை 'இசைப்பாட்டு' என உரையாசிரியர் கூறுவர்.      கலித்தொகையின் பாடல் எண்ணிக்கை நூற்றைம்பது என்று பேராசிரியரும், களவியல் உரையாசிரியரும் குறிப்பிடுவர்.  150 பாடல்களும் சிறிதளவு சிதைவும் இன்றி முழுமையாகக் கிடைத்துள்ளன.      முதல் பாடல் ...

ஐங்குறுநூறு

           ஐந்திணை ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல் வீதம் பெற்ற ஐந்நூறு பாடல்கள் கொண்டது, ஐங்குறுநூறு.  இதன் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்டவை.  ஆசிரியப்பாவின் சிற்றெல்லையே மூன்றடி தான் என்பது இங்கே நினைக்கத் தக்கது; குறுந்தொகையினும் குறுகிய அடிகள் பெற்ற பாக்களைக் கொண்டது என்னும் பொருளில் ஐங்குறுநூறு என்னும் பெயரிடப் பெற்றது.  நூலின் முன்னே கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று உள்ளது.  இதன் 129, 130 ஆகிய பாடல்கள் மறைந்து போயின.      இத் தொகைநூலைத் தொகுப்பித்தோன் யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை.  தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.  இவர் இரும்பொறை ஏவ, ஐந்திணை பாடவல்ல ஐவரை அணுகி, திணைக்கு நூறு பாடல்கள் 3 - 6 என்னும் அடிவரையறைக்குள் பாடுமாறும், நூறு பாடலும் பத்துப் பாடல்கள் கொண்ட பத்துப் பகுதிகளாக அமைத்துக் கொள்ளுமாறும் வேண்டிப் பெற்றுத் தொகுத்தே இத்தொகை நூல்.  தொகுப்பாசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க மருதத்தை ஓரம் போகியாரும் நெய்தலை அம்மூவனாரும், குறிஞ்சியைக் கபிலரும், பாலைய...

அகநானூறு

     நற்றிணைப் பாடல்களிலும் நெடிய பாடல்களைக் கொண்ட தொகை நூல் அகநானூறு.  இதன் பாடல்களின் அளவு சிறுமை 13 அடி.  பெருமை 31 அடி.  இந்நூல் நெடுந்தொகை நானூறு என்னும் பெயரையே முதலில் பெற்றிருந்தது.  இத்தொகை நூலின் பாயிரமும் 'முன்னர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு' என்று குறிப்பிடுகிறது.  அகநானூற்றுப் பாயிரத்தை இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்வதரையன் பாடியுள்ளான்.  பின்னர் அது அகம், அகப்பாட்டு, அகநானூறு என வழங்கப்பட்டது.      நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி; தொகுத்தோன் உப்பூரி குடிகிழான் மகன் உருத்திர சன்மன்.  பூரிக்கோவும் உருத்திரசன்மனும் ஒருவரே என்பதை முன்னர்க் கண்டோம்.  குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களைத் தொகுத்த பின்னர், அந்த அனுபவ முதிர்ச்சியால் உருத்திரசன்மன் இத்தொகை நூலை முப்பிரிவுகளாகப் பிரித்ததோடு குறிப்பிட்ட எண் பெற்ற பாடல் குறிப்பிட்ட திணை பற்றிய பாடலாக அமையுமாறு செய்தான்.  1 முதல் 120 பாடல்கள், 'களிற்றி யானை நிரை' எனவும் 121 முதல் 300 வரையுள்ள 180 பாடல்கள் ' மணிமிடைபவளம்' எனவும், ...

நற்றிணை

           குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை.  திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம்.  சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர்.  இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு' எனவும் வழங்கப்பட்டது.  எனினும் 234 ஆம் பாடல் எனச் சிலரும், இறையனார் அகப் பொருள் உரையில் மேற்கோளாக வரும், 'சான்றோர் வருந்திய வருத்தமும்' எனத் தொடங்கும் பாடலே மறைந்து போன நற்றிணைப் பாடல் எனச் சிலரும் கூறுவர்.  385 ஆம் பாடலின் பிற்பகுதி மறைந்து போனது.  56 பாடல்களைப் பாடிய புலவர்கள் பெயர் தெரியவில்லை.      நற்றிணையைத் தொகுப்பித்தவன், பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  தொகுத்தவர் பெயர் ஏட்டில் இல்லை.  நற்றிணையை 1914-இல் உரை எழுதிப் பதிப்பித்தவர், பி...

குறுந்தொகை

     எட்டுத் தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்ட நூல், இது.  இதற்குக் 'குறுந்தொகை நானூறு' என்றும் பெயர் இருந்ததை இறையனார் களவியல் உரையால் அறியலாம்.  இதன் சிற்றெல்லை நான்கு அடி; பேரெல்லை எட்டடி.      தற்போது கிடைக்கும் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன.  307, 391 ஆகிய இரு பாடல்களும் குறுந்தொகையின் பேரெல்லையை மீறி ஒன்பது அடிகள் பெற்றுள்ளன.  391 ஆம் பாடல் சில பாட பேதங்களுடன் எட்டடியாகச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது.  307 ஆம் பாடல் எல்லா ஏடுகளிலும் ஒன்பது அடி கொண்டதாகவே அமைந்துள்ளது.  எனவே இப்பாடலை நீக்கினால் ' குறுந்தொகை நானூறு' என்னும் பெயர் பொருத்தமாக அமைகிறது.      'இத்தொகை முடித்தான் பூரிக்கோ, இத் தொகை பாடிய கவிகள் இரு நூற்றைவர்' என்னும் பழங் குறிப்பு நூலின் இறுதியில் காணப்படுகிறது.  குறுந்தொகையின் 380 பாடலுக்குப் பேராசிரியர் உரை வகுக்க.  எஞ்சிய 20 பாடலுக்கு நச்சினார்க்கினியர் உரை வழங்கினார்.  இதை, " நல் அறிவுடைய தொல் பேராசான் கல்வியும் காட்சியும் காசினி அறிய  பொருள்த...

தொகைநூல் வரலாறு

      ஒரு மொழி தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சிக்குப் பின்னரே இலக்கண அமைதி நிறைந்த பாட்டுத் தோன்ற முடியும்.  பலர் எழுதிய பல நூறு பாடல்களைத் திரட்டி ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் தொகுத்துத் தொகை நூலாக்க இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும்.  தொகை நூல்களின் தேவையை முற்றிலும் உணர்ந்து கதைகள், கவிதைகள், அறிவியல் கட்டுரைகள், பழமொழிகள், பொன்மொழிகள் முதலிய தொகை நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் எண்ணிறந்தன எழுந்த காலம் இருபதாம் நூற்றாண்டே.  தொகை நூல் என்பது ஒரு மொழியின் இலக்கிய ஏற்றத்தைக் காட்டும் இமயச் சிகரமாகும்.  தமிழில் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பே செம்மை வாய்ந்த தொகை நூல்கள் தோன்றின.  அவை மொத்தம் எட்டு. " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம் புறம் என்(று) இத்திறத்த எட்டுத் தொகை" என்னும் வெண்பா, எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.      இவ்வெட்டினுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகப்பொருள் உரைப்பன.  புற...

சங்க இலக்கியம்

     ' தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடினார் நாமக்கல் கவிஞர்.  தமிழனைத் தலைநிமிர்த்தி நிற்குமாறு செய்வதே சங்க இலக்கியந்தான்.  இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும், காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர்.  இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கற்பனைக் கலப்பின்றிப் படம் பிடிக்கும் அற்புதக் கண்ணாடியே சங்க இலக்கியம்.      எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததையும், முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததையும், அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணங்கள் வளர்ந்து சிறந்ததையும், உரைக்கிறது சங்க இலக்கியம். அன்னையர் தோன்றி மழலைகள் கூறி அறிவுற்றதையும், அவர் கன்னியராகி நிலவினில் ஆடிக் களித்தத்தையும், மங்கையராய் அவர் இல்லறம் நன்கு வளர்த்ததையும், அவர் தங்கமதலைகள் ஈன்று அமுதூட்டித் தழுவியதையும் விழுமியமுறையில் விளக்குவது சங்க இலக்கியம்.      பண்டைய தமிழ் நாட்டின் மண்ணையும் விண்ணையும், மக்களையும், மாக்களையும், பயிர்களையும், உயிர்களையும், மலையையும், கலையையும் அவற்றின் தோற்றத...

தொல்காப்பியம்

      தொன்மைத் தமிழில் தோன்றிய நூல்களில் இன்று நமக்குக் கிடைப்பனவற்றுள் மிக மிகத் தொன்மையானது தொல்காப்பியம்.  எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய நூல்களுக்குக் காலத்தால் மூத்தது, தொல்காப்பியம்.      தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்.  இதனை இயற்றிய தொல்காப்பியர், அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர் என்பவர்.     இக்கூற்றிற்குப்    போதிய சான்றுகள் இல்லை.  வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகத்தில் வழங்கிய பேச்சு மொழியினையும் இலக்கிய மரபினையும் ஆராய்ந்து, தமக்கு முன்னேயிருந்த இலக்கிய நூல்களைக் கற்று எழுத்து,சொல்,பொருள் பற்றி விரிவாகக் கூறும் தொல்காப்பியத்தை இயற்றினார்.  ஒல்காப் பெருமைத் தொல்காப்பியர்.  இந்நூல், நிலந்தரு திருவின் பாண்டியன் அவையில் அதங்கோட்டு ஆசான் முன்னிலையில் அரங்கேறியது.  இச்செய்திகளைத் தொல்காப்பியத்திற்குப் பனம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் மூலம் அறிகிறோம்.      சிறப்புப் பாயிரம், "மல்குநீர் வரைப்பின்  ஐந்திரம் நிறைந்த தொல்காப்பி...

தமிழின் தொன்மை

கி.மு. 500 - கி.பி.100 'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்       விண்ணோடும் உடுக்களோடும்  பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்' என்கிறார், பாவேந்தர் பாரதிதாசன்.  'என்றுமுள தென் தமிழ்' என்பதும் இதே கருத்தையே தருகிறது.  தமிழ் இல்லாத காலம் இத்தரணியில் இல்லை என்பதே சான்றோர்களின் துணிவு.  உலகின் முதல் மொழியாக, அல்லது உலகில் தோன்றிய சில மொழிகளில் ஒரு மொழியாக - உயர்ந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது.  தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் என்று  பிறந்தவள் என்றுணர முடியாத இயல்பை - ஏற்றத்தைப் பெற்றவள், தமிழ்த் தாய்.      தரணியின் மூத்த மொழியாய்த் தமிழ் திகழ்ந்தமையால், உலகத்தின்  தொன்மை மொழிகள் பலவற்றிலும் தமிழ் மணம் வீசக் காண்கிறோம்.  கிரேக்கம், ரோம், எகிப்து முதலிய மேற்றிசை நாடுகளுடனும் சீனம், மலேயா, ஜாவா முதலிய கீழ்த்திசை நாடுகளுடனும் தமிழர் தொன்றுதொட்டே வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழகத்தின் முத்து, மிளகு முதலான பொருள்களை வாங்குவதில் ஆண்டுதோறும் குறைந்த அளவு 55,000,000 தங்க நாணயங்களை (4,86,9...