கி.மு. 500 - கி.பி.100
'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்'
தமிழ்நாட்டு அரண்மனையில் ரோம் நாட்டினர் படைவீரர்களாகப் பணி புரிந்தனர். கிரேக்க அரசன் அகஸ்டசின் அவைக்குப் பாண்டியன் தன் தூதுவனை அனுப்பினான். கிரேக்க தூதுவனாகச் சந்திரகுப்த மௌரியன் காலத்தில் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டின் அரசைப் பற்றியும், மக்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளான்.
தமிழின் தொன்மை முன்னைப் பழைமைக்கும், முன்னைப் பழைமை மிக்கது. அதனால்தான் தமிழ் அகிலம் தோன்றியபோதே தோன்றிய மொழி, என்று பலரும் பாராட்டுகின்றனர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே, இந்தியா இந்தியா முழுவதும் ஒரு மொழி பரவியிருந்தது. அதுவே திராவிட மொழிகளுக்கு முந்திய மொழி. அதனைப் பழந்திராவிட மொழி என வழங்கினர் . பிறமொழிகளின் படையெடுப்பால் அதிகம் பாதிக்கப்படாத அப்பழந்திராவிட மொழியிலிருந்து பல புதுத்திராவிட மொழிகள் தோன்றின. சில இன்றும் வட இந்தியாவில் வழங்கி வருகின்றன. இந்தியாவின் வடமேற்கே பலுச்சிஸ்தானத்தில் வழங்கும் பிராகூய் (Brahui) மொழி, அத்தகைய திராவிட மொழியே ஆகும்.
இந்தியாவில் பன்னிரண்டு திராவிட மொழிகள் உள்ளன என்பது கால்டுவெல் கூற்று. அவை இருபது என்பது அண்மைக் காலத்து மதிப்பீடு. இத்திராவிட மொழிகளில் சிறந்தது தமிழ்.
வட இந்தியாவில் பாலி , பிராகிருத்தம் முதலிய மொழிகள் செல்வாக்குப் பெற்றபோது பழந்திராவிட மொழி தென்னிந்திய எல்லைக்குள் அடங்கி நின்றது. ஒரு பகுதியையும் மற்றோர் பகுதியையும் தூரம் பிரித்த போது, பேராறும் உயர் மலைகளும் குறுக்கிட்டபோது, ஆடசியாளர்கள் வேறுபட்டபோது, அவ்வப்பகுதிகளில் வழங்கிய ஒரே மொழி மாறுபட்டுக் காலப்போக்கில் வேறு வேறு மொழிகள் எனும் நிலை அடைந்து, தமிழின் மூல மொழியான பழந்திராவிட மொழி ஒன்று பலவாக உருவெடுத்தது. வேங்கடத்துக்கு வடக்கே இருந்தவர்கள் வழங்கிய மொழி தெலுங்கு என்றும், கருநாடகப் பகுதியினர் உரையாடிய மொழி கன்னடம் என்றும், கேரளத்து மக்கள் கிளத்திய மொழி மலையாளம் என்றும் வழங்கப்பட்டன. இம்மாற்றம் சிறிது சிறிதாக நிகழ்ந்து முடிவில் தனித்தனி மொழிகளாக முகிழ்த்து மலர்ந்தன.
தமிழும் வடமொழியும் கலந்து பிறந்தது தெலுங்கு அதை வடக்கே இருந்தவர் பேசியதால் வடுகு (வடகு) என்றனர். அதைப் பேசியவர் வடுகர் என்றும் வழங்கப்பட்டனர். தமிழும் வடுகும் கலந்த கலப்பில் பிறந்ததே கன்னட மொழி.
'மழலைத் திருமொழியிற்சில வடுகும் சில தமிழும்
குழறித் தரு கருநாடியர் குறுகிக் கடைதிறமின் '
என்னும் கலிங்கத்துப் பரணி' பாடலும் இதை உணர்த்துகிறது. கன்னடத்தின் தொடர்பாலும், கிரந்த எழுத்துகளின் செல்வாக்காலும் கேரள நாட்டுத் தமிழ் கோடுந்தமிழாகி மிகப் பிற்காலத்தே மலையாளமாக மாறியது.
தெலுங்கும் கன்னடமும் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழிலிருந்து பிரிந்து தனி மொழிகளாகிவிட்டன. கேரளத்தில் கி.பி. பத்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்னரே மலையாளம் தனி மொழியானது. எனினும் ரிக்வேதத்தைச் சேந்த 'அயித்ரேய பிராம'ணத்தில் ஆந்திரர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் வேத காலத்துக்கு முன்னரே பழந்திராவிடத்திலிருந்து தெலுங்கு தோன்றிவிட்டது என்றும், கி.மு. வில் இயற்றப்பட்ட ரோமநாடகம் ஒன்றில் கன்னடச்சொற்கள் அமைந்த காடசி இருப்பதால், கிறித்து பிறப்பதற்கு முன்னரே கன்னடம் தனி மொழியானது என்றும் கூறுவோர் உண்டு.
தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதால் இது சிவபெருமானால் உண்டாக்கப்பட்டது என வழங்கினர் . சிவ பெருமான் தமிழை அகத்தியர்க்கு உணர்த்தினாராம். இதனை, 'தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ்' என்பதாலும், 'ஆதியில் தமிழ்நூல் அகத்தியற் குணர்த்திய மாதொரு பாகன்' என்பதாலும் அறியலாம்.
தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள். 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பிங்கல நிகண்டு உரைக்கிறது. இவ்விரு பொருளில் தமிழ் என்னும் சொல்லைப் புலவர்கள் வழங்கியுள்ளனர். 'இன்றமிழ்' எனத் தமிழைச் சிறப்பிக்கின்றனர். 'இன்றமிழ் இயற்கை இன்பம்' எனச் சீவக சிந்தாமணியிலும் வருகிறது. 'தமிழ் வையைத் தண்ணம் புனல்'என்னும் பரிபாடல் வரிக்கு 'இனிமையுடைய வையைப் புனல்' என்பதே பொருள். 'தமிழ்ப் பாட்டிசைக்கும் தாமரையே'என்னும் கம்பன் பாடலிலும் தமிழ் இனிமை என்னும் பொருளையே தருகிறது. நீர்மை, அழகு,மென்மை முதலான பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும், இனிமை என்பதே இயல்புணர்த்தும் சிறப்புப் பொருளாகும்' வாழ்மீகியும் தமிழை "மதுரமான மொழி" என்றே குறிப்பிடுகிறார்.
இவ்வினிமைப் பண்பை முற்றிலும் உணர்ந்தே பாரதிதாசன், 'இனிமைத் தமிழ்மொழி எமது' என்றும் 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்றும் பாடினர்.
தமிழின் பெருமைபேசப் பேசப் பெருகுவது "வானம் அளந்தது அனைத்தும் அறிந்து வளர்மொழி" என்றும் பாடிப் பாரதியார் பரவசமடைகிறார்.
இப் பைந்தமிழின் பின்னே பச்சைப் பசுங் கொண்டலான திருமால் சென்றார் என்பதையும் 'முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பான் முருகன்' என்பதையும் பக்தர்களாகிய பாவலர்கள் பாடி மகிழ்கிறார்கள். இறைவனையே தமிழ் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார் திருமங்கையாழ்வார்.
பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்திலே அரசோச்சிய தமிழணங்கு, அவற்றைக் கொடுங்கடல் கொண்ட பின்னும் வாழ்ந்தது! வளர்ந்தது! ஆரிய மொழியின் ஆதிக்கம் தென்னாட்டில் புகுந்தபோதும், தமிழ் வாழ்ந்தது! வளர்ந்தது! ஆங்கில மொழியின் செல்வாக்கு ஓங்கிய நிலையிலும் தமிழ் வாழ்ந்தது! வளர்ந்தது! இந்தியை எப்படியேனும் இந்நாட்டில் புகுத்திடப் பல்துறை முயற்சி நடைபெறும் இன்றும் தமிழ் வாழ்கிறது! வளர்கிறது! அன்றும் இன்றும் என்றும் வண்டமிழ் வள மொழியாக வாழ்வதற்குக் காரணம் அதன் இலக்கண இலக்கியச் செழிப்பும் சிறப்புமே. இவ்விலக்கண இலக்கியத்தின் வரலாற்றை இனிவரும் பகுதிகளில் விளங்கக் காண்போம்.
'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்'
என்கிறார், பாவேந்தர் பாரதிதாசன். 'என்றுமுள தென் தமிழ்' என்பதும் இதே கருத்தையே தருகிறது. தமிழ் இல்லாத காலம் இத்தரணியில் இல்லை என்பதே சான்றோர்களின் துணிவு. உலகின் முதல் மொழியாக, அல்லது உலகில் தோன்றிய சில மொழிகளில் ஒரு மொழியாக - உயர்ந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது. தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் என்று பிறந்தவள் என்றுணர முடியாத இயல்பை - ஏற்றத்தைப் பெற்றவள், தமிழ்த் தாய்.
தரணியின் மூத்த மொழியாய்த் தமிழ் திகழ்ந்தமையால், உலகத்தின் தொன்மை மொழிகள் பலவற்றிலும் தமிழ் மணம் வீசக் காண்கிறோம். கிரேக்கம், ரோம், எகிப்து முதலிய மேற்றிசை நாடுகளுடனும் சீனம், மலேயா, ஜாவா முதலிய கீழ்த்திசை நாடுகளுடனும் தமிழர் தொன்றுதொட்டே வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். தமிழகத்தின் முத்து, மிளகு முதலான பொருள்களை வாங்குவதில் ஆண்டுதோறும் குறைந்த அளவு 55,000,000 தங்க நாணயங்களை (4,86,979 பவுன்கள்) ரோம் நாடு செலவிட்டது என்றும், அதன் மூலம் அரசின் செல்வ வளம் வற்றியது என்றும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டினரான பிளினி குறிப்பிடுகின்றார். கி.மு. பத்தாம் நூற்றாண்டினனாகிய அரசன் சாலமனுக்கு மயில் தோகை, யானைத் தந்தம் முதலியன தமிழ்நாட்டிலிருந்து சென்றன. தோகை, கபி ஆகிய தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் Tukim, Kapim என்று திரிந்து வழங்கின. சந்தனம் , அரிசி என்னும் சொற்கள் கிரேக்கத்தில் நுழைந்து, பின் ஆங்கிலத்தில் Sandle - Wood, Rice என்று வழங்கி வருகின்றன, கி.பி. முதல் நூற்றாண்டினரான தாலமியும் தமிழ்நாட்டுத் துறைமுகங்களைப் பற்றியும் தமிழரின் கடல் வாணிகச்சிறப்பைப் பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார். பால்வி (Pahlvi), அக்காடியா (Accadia), அஸ்ஸீரியா (Assyria), அபிஸீனியா (Abyssinia), ஜான் ஜீ பார் (Zanzibar), பின்லாந்து (Finland) முதலிய நாடுகளின் மொழிகளில் தமிழ்ச் சொற்களோடு ஒத்த சொற்கள் எண்ணற்றவை உள்ளன.தமிழ்நாட்டு அரண்மனையில் ரோம் நாட்டினர் படைவீரர்களாகப் பணி புரிந்தனர். கிரேக்க அரசன் அகஸ்டசின் அவைக்குப் பாண்டியன் தன் தூதுவனை அனுப்பினான். கிரேக்க தூதுவனாகச் சந்திரகுப்த மௌரியன் காலத்தில் இந்தியாவுக்கு வந்த மெகஸ்தனீஸ் பாண்டிய நாட்டின் அரசைப் பற்றியும், மக்களைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளான்.

0 கருத்துகள்