முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யசோதர காவியம்

     'யசோதர காவியம்' என்னும் சிறு காப்பியம் வட மொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. இக்காவியம் கூறும் யசோதரன் முதலான மாந்தர்களின் வரலாறு வேறெந்தத் தமிழ் நூலிலும் குறிக்கப் பெற வில்லை. ஆனால் வடமொழியில் யசோதரன் வரலாறு கூறும் நூல்கள் பல உள.     மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியான உத்திர புராணத்தைக் குணபத்திரர் இயற்றினார். இப்புராணத்தில் தான் முதன் முதலில் யசோதர காவியக் கதை கூறப்படுகின்றது.  இக்கதையைச் சோமதேவ சூரி என்பவர், "யசஸ் திலகம்" என்னும் பெயரிலும், வாதி ராச சூரி என்பவர் "யசோதர சரிதம்" என்னும் பெயரிலும் தனி நூல்களாக எழுதினார். ஹரி பத்ஃதிரர் என்பரும் புட்பதந்தர் என்பவரும் இதே கதையை யசோதர காவியமாக இயற்றியளித்தனர்.  தமிழில் உள்ள யசோதர காவியம் புட்பதந்தர் இயற்றிய வடமொழி நூலைத் தழுவியது என்று ஒரு வெண்பா கூறுகின்றது.  இதே வெண்பா, யசோதர காவிய ஆசிரியர் பெயர் வெண்ணாவலூர் உடையார் வேள் எனவும் குறிப்பிடுகின்றது. 'புட்பதந்தன் சொன்ன பொருள்சேர் கதைதன்னைத்  திட்பமாய்ச் செந்தமிழில் செப்பினான் - நட்புடையார்  நண்ணார் இலர் என்ன நாடகக் கொடைக்கையார்  வெண்ணா...

சூளாமணி

  ஐஞ்சிறு காப்பியங்கள்      ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வழக்குப் பிற்பட்ட காலத்தே தோன்றிய வழக்கு என்பதை முன்னர் கண்டோம்.  கி.பி. 13 அல்லது 14 ஆம்  நூற்றாண்டினர் ஆகிய மயிலைநாதர் இவ்வழக்கைப் பயன்படுத்துகின்றார். அதனால் ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கு இதற்கும் பிற்பட்ட காலத்தே தோன்றியிருக்க வேண்டும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனக் கூறும் வழக்குச் சமணர் இடையே வழங்கியதாகலாம் என்று கூறுகின்றார் , தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்‌. சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் என்பனவையே ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும். சூளாமணி      சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித் தேவர். சிரவண பெளகுளாவில் உள்ள ஒரு கல்வெட்டு, மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியை இயற்றிய குணபத்திராச்சாரியார், அவருக்குப் பின் சமணத் துறவியர் பரம்பரையில் வந்த சிந்தாமணி ஆச்சாரியார்.  அவருக்குப் பின்வந்த சூளாமணி ஆசிரியரான ஶ்ரீ வர்த்தமான தேவர் ஆகியோரை பற்றிக் குறிப்பிடுகின்றது.  இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட வர்த்தமான தேவரே, தோலாமொழித் தேவர் என்று சிலர் கூறுவர். சூளாமணிக் ...

குண்டலகேசி

       ஐம்பெருங் காப்பியங்களுள் மணிமேகலையைப் போலக் குண்டலகேசியும் பௌத்த காப்பியம் ஆகும். சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்கள். குண்டலகேசி சமய வாதம் பேசும் காப்பியமாகும். இக்காப்பியம் கிடைக்கவில்லை. பழைய உரையாசிரியர்கள் இக்காப்பியக் கவிதைகளைத் தம் நூல்களில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளனர். அப்பாடல்களைக்  கொண்டும், அவை பயன்படுத்தப்பட்ட நூல்களைக் கொண்டும், குண்டலகேசி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் எனக் கூறுவர்.       குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார்.  இவர் பௌத்த மதத்தினர்.  சமண சமயக் கொள்கைகளை மறுப்பதற்காகவே இவர் இக்காப்பியம் செய்தார்.      பத்தரை என்பவள் வணிகன் பெற்ற பாவை. களவுக்காகக் காவலில் இருந்த காளன் என்னும் வைசிய புத்திரனைக் கண்டு காதல் கொண்டாள்; தந்தையின் துணையால் அவனை மீட்டு மணந்து கொண்டாள். இருவரும் இல்லற இன்பம் துய்த்து இனிதிருந்த காலத்தில் ஒருநாள் ஊடற் காலத்தில் "நீ கள்வன் அன்றோ" என்று சினந்து பேசினாள் பத்தரை. அதனால் சினம் கொண்ட காளன் அவளை வஞ்சகமாக மலை உச்சிக்கு அழைத்துச் ச...

வளையாபதி

     ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூல் கிடைக்கவில்லை. இதன் கதையை வைசியபுராத்தால் அறியலாம் என்பர். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனினும் 'நிக்கந்த வேடத்து இருடி கணம்' என்றும், 'அறிவன்' என்றும் இதன் பாடல்கள் கூறுவதால் இக்காப்பியம் சமண நூல் என்பதனையும், இயற்றியவர் சமணப் புலவர் என்பதனையும், அறிகின்றோம்.  கிடைத்த பாடல்களில் சில ஆறடிப் பெற்ற பாடல்களாக இருக்கின்றன. நாலடியாக வரும் பாடல்களில் சில, இரண்டு வெவ்வேறு எதுகையைப் பெற்று வருவதால் இந்நூல் இளம்பூரணம், யாப்பருங்கல விருத்தி விருத்தி ஆகியவற்றுக்கு முற்பட்ட 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது எனக் கூறலாம்.        வளையாபதி பாடல் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பரிமேலழகர் ஆகியோர் உரைகளிலும் யாப்பருங்கல உரையிலும், புறத்திரட்டு எனும் தொகை நூலிலும் காணப்படுகின்றன. இவற்றில் இருந்து திரட்டப்பட்ட பாடல்கள் மொத்தம் எழுபது. இப்பாடல்களுக்குப் பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் உரை எழுதச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் பதிப்பித்துள்ளது.      'தக்கயாகப் பரணி' யி...

சீவகசிந்தாமணி

  IV சோழர் காலம் கி.பி. 850 - 1350 ஐம்பெருங் காப்பியங்கள் சீவக சிந்தாமணி       ஐம்பெருங் காப்பியங்களைக் கூறும் போது, காலத்தே பிற்பட்ட சீவக சிந்தாமணியை முற்பட மொழிதல் மரபு. காப்பியத்தின் செம்மையான அமைப்பை முழுமையாகப் பெற்று , பின்னே எழுந்த காப்பியங்களுக்கு வழிகாட்டியாகி, சமண காப்பியம் ஆயினும் ஏனைய சமயத்தவராலும் ஏற்றிப் போற்றப்படுவதால் இதனை முதலாவதாக அமைத்தனர் போலும்.    தமிழ் காப்பியங்களில் பழைய உரை பெற்றவை இரண்டு.  அவை சிலப்பதிகாரமும் சிந்தாமணியுமாம்.  சங்க நூல்கள் பலவற்றுக்கு உரை வகுத்த உச்சிமேல் புலவர் கொள்ளும் நச்சினார்க்கினியரின் அறிவுரயைப்  பெற்றிருப்பதும் இந்நூலுக்கு ஒரு சிறப்பாகும்.      சீவக சிந்தாமணியை இயற்றிய மாபெரும் கவிஞர் திருத்தக்கதேவர்.   இவரைத் திருத்தகு முனிவர், திருத்தகு மகாமுனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்னும் வேறு பெயர்களாலும் குறிப்பிடுவர்.  தேவர் ஒரு சமணத் துறவி. ஆன்ற புலமை பெற்ற சான்றோர் ஒருவரை ஆசிரியராகக் கொண்டு, கற்பன யாவும் கற்றுத் தேர்ந்தார் .  இவர் மதுரையில் இருந்த தமிழ்ச...