முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 13, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலிங்கத்துப் பரணி

     பரணி இலக்கியங்களில் மிகவும் பழமையானது 'கலிங்கத்துப் பரணி'.  இதுவே பரணி நூல்களில் தலை சிறந்தது என்று, அன்று முதல் இன்று வரை போற்றப்படுகின்றது.     கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.  இவர் தீபங்குடி என்னும் ஊரினர்.  இவர் கி.பி. 1070 முதல் 1118 வரை ஆண்ட முதல் குலோத்துங்கன் காலத்தவர்.  குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், சோழப் பெரும் படையுடன் கலிங்க நாடு சென்று, வாகை சூடித் திரும்பினான்.  அதன் பின் குலோத்துங்கன் , சயங்கொண்டாரிடம் உரையாடிய போது , "கலிங்கம் வென்றமையால் யானும் சயங்கொண்டான் ஆயினன் "  என்று கூறினான்.  அதைக் கேட்ட புலவர், "அப்படியாயின் சயங்கொண்டானான உன்னைச் சயங்கொண்டானான யான் பாடுவது தகும் " என்று கூறினார்.  அதனால் பிறந்ததே 'கலிங்கத்துப் பரணி' என்று கூறுவர் .     கலிங்கத்துப் பரணி மொத்தம் பதின்மூன்று பகுதிகளைக் கொண்டது.  அவையாவன: கடவுள் வாழ்த்து, கடைத்திறப்பு , காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, இந்திரசாலம், இராச பாரம்பரியம், பேய்முறைப்பாடு, அவதாரம், காளிக்க...

பரணி

  'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற  மானவனுக்கு வகுப்பது பரணி.'     என்பது இலக்கண விளக்கத்தின் கூற்று.  போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனைச் சிறப்பித்துப் பாடுவதே பரணி என்னும் சிற்றிலக்கியமாகும் .     பரணி என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர்.  போர்க் குரிய தெய்வமாகிய காளி (கொற்றவை)க்குரிய நாள் பரணி.  எனவே வெற்றி பெற்ற வேந்தன் பரணி நாளில் கொற்றவைக்குக் கூழ் அட்டுப் படைத்துக் கொண்டாடுவது மரபாகும்.     பரணி பலவகை உறுப்புக்களைக் கொண்டது.  அவை கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாடியது.  பேய் முறைப்பாடு, காளிக்குக் கூளி கூறியது, களம் பாடியது, வாழ்த்து முதலியனவாம். ஒவ்வொரு பரணியிலும் இவ்வுறுப்புக்கள் முறை மாறி வேறு வகையிலும் இடம் பெறுதல் உண்டு.     போரிலே வென்றவரைச் சிறப்பிப்பதே பரணி இலக்கியம் என்றாலும் தோற்றவரைச் சார்ந்தே நூலுக்குப் பெயரிடுவது மரபு .  கலிங்கத்துப் பரணி, தக்கயாகப்பரணி,பாசவதைப் பரணி, இரணியவதை ப் பரணி முதலியன தோற்றோரின் பெயரிலே அமைந்ததைக் காண்க.