6. திரிகடுகம் கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று உட்பட, மொத்தம் 100 பாக்களைக் கொண்டது, 'திரிகடுகம்'. பிணி நீக்கி அணி செய்யும் மருந்துப் பொருளே, திரிகடுகம். திவாகரநிகண்டு "திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி " என்று பொருள் கூறும். வடமொழியில் வழங்கும் சுச்ருதம், அஷ்டாங்க ஹ்ருதம் என்னும் மருத்துவ நூல்களும், திரிகடுகம் என்னும் மருந்தின் சிறப்பைக் கூறும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்று மருந்துப் பொருளும் உடல் நோய் நீக்கும். அதுபோல அந்நூல் பாடல் உரைக்கும் மூன்று அறக்கருத்துகள் உள்ளத்தின் நோய் நீக்கும். எனவே இது திரிகடுகம் எனப் பெயர் பெற்றது. இதனை, ' உலகில் கடுகம் உடலின் நோய் மாற்றும்;' அலகில் அகநோய் அகற்றும் - நிலைகொள் திரிகடுகம் என்னும் திகழ்தமிழ்ச் சங்கம் மருவு நல்லாதன் மருந்து. என்னும் பாயிரச் செய்யுள் பகர்கின்றது. இந்நூலாசிரியர் பெயர் நல்லாதனார். ஆதன் என்னும் இயற்பெயர் 'நல் ' என்னும் பண்பு நலத்து அடைமொழியினையும், உயர்வைக் குறிக்கும் 'ஆர்' என்னும் விகுதியையும் ப...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.