குறிஞ்சித்திணைப் பொருளைக் கூறுவதே குறிஞ்சிப் பாட்டு. இது 261 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இதைப் பாடினார் கபிலர் எனும் குறிப்புத் தருகிறார் நச்சினார்க்கினியர், அகப்பொருளே தமிழின் மிகப் பெருஞ்சிறப்பு எனக்கருதியும், ஏறத்தாழ நூறுவகைப் பூக்களின் வேறு வேறு பெயர்களை உரைக்கும் தமிழின் வளத்தையும் தமிழரின் பயிர் நூல் நலத்தையும் கூற ஏற்றது குறிஞ்சித் திணை எனக் கருதியும் கபிலர், இப்பாடலைப் பாடி ஆரிய அரசன் தமிழாற்றலை அறியச் செய்தார் போலும்! கபிலர், குறிஞ்சி பாடுவதில் வல்லவர். அகத்தொகை நூல்களிலும்,பதிற்றுப் பத்து, புறநானூறு ஆகிய புறத்தொகை நூல்களிலும் இவர்தம் புலமை விளங்கும் பாடல்கள் உள்ளன. தலைவியின் சீரிய அழகு சிதைவதற்குரிய காரணம் களவு என அறியாத செவிலித் தாய்க்குத் தோழி உண்மையை உணர்த்தி அறத்தொடு நிற்றலைத் தெரிவிப்பது இப்பாட்டு. தோழி அறத்தொடு நிற்றல் ஏழு வகையின என்பர், தொல்காப்பியர். அவற்றுள் ஆறு வகையினை உள்ளடக்கியது கபிலரின் பாட்டு. இதை 'பெருங்குறிஞ்...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.