முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

1. திருக்குறள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்      பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பின்வரும் வெண்பா கூறுகிறது. ' நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்  பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம்  இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே  கைந்நிலையும் அம்கீழ்க் கணக்கு '     இந்த வெண்பா எந்த வரிசையில் அவற்றைச் சொல்கிறதோ அதே வரிசையில் கூறுவது மரபு.  அவ்வரிசை முறை இது.  1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இனியவை நாற்பது, 4. இன்ன நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமொழி ஐம்பது, 9. ஐந்திணை எழுபது, 10. திணைமாலை நூற்றைம்பது, 11. திருக்குறள் (முப்பால்), 12. திரிகடும், 13. ஆசாரக் கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. முதுமொழிக் காஞ்சி, 17. ஏலாதி, 18. கைந்நிலை அல்லது இன்னிலை .     இவற்றுள் நீதி நூல்கள் 11, அகப்பொருள் நூல்கள் 6, புறப்பொருள் நூல் 1.  இதே வரிசை முறையில் இவற்றைக் காண்போம்.     நீதிநூல்கள்  1. திருக்குறள்      நீதி நூல்கள் காலத்தால் முற்பட்டது திருக்குறள்.  இதனை, சங்க காலத்தது என்றும், ச...

கீழ்க்கணக்கு மேல்கணக்குப் பிரிவு

  கணக்கு - நெடுங்கணக்கு      சங்க இலக்கிய நூல்களையும் சங்கம் மருவிய காலத்து நூல்களையும் முறையே பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எனப் பிரிப்பது மரபு.  இவற்றைத் தமிழ்விடு தூது,                                                                           'மூத்தோர்கள்  பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்  கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்'     என்று மொத்தமாகக் குறிப்பிடுகிறது.     கணக்கு என்னும் சொல் தற்காலத்தே எண் தொடர்பான கணிதத்தைக் குறிக்கும் பண்டைக் காலத்தில், கணக்கு என்பது எழுத்துகளையும் , எழுத்தினால் இயற்றப்பட்ட இலக்கியங்களையும் குறித்தது.     தமிழ் மொழியின் உயிர்,மெய் எழுத்துகளை நெடுங்கணக்கு என வழங்கினர். இலக்கியங்களைக் கணக்கு என வழங்கியதைப் பதினெண் கீழ...

இருண்ட காலம்

            சங்க காலம் என்பது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.  சிலர் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் என்பர்.  கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலம் இருண்ட காலம் ஆகும்.  இது தமிழ்நாட்டு வரலாற்றிலும் இருண்ட காலம். தமிழிலக்கிய வரலாற்றிலும் இருண்ட காலம்.  இதே காலப்பகுதியைச் 'சங்கம் மருவிய காலம்' என்றும் குறிப்பிடுவார்கள். இருண்ட காலத்து இலக்கியங்கள்      தமிழ்நாடு முழுவதையும் அடிமைப்படுத்திய களப்பிரர் காலமாகிய இருண்ட காலத்தில் சங்க இலக்கியம் போன்ற - சிலம்பு, மேகலை போன்ற முழுநிலா உதயமாகவில்லை.  எனினும் செறிந்த இருளின் நடுவே கண்சிமிட்டும் விண்மீன்கள் போலச் சில நீதி நூல்கள் தோன்றின.  இவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் ஆகும்.  அவற்றுள் நீதி நூல் அல்லாத வேறு நூல் சிலவும் உண்டு.     புறச் சமயங்களின் ஆதிக்கத்துக்கு நடுவே அகச் சமயத்துக்கு ஆக்கம் தேடும் ஊக்கமும் உணர்வும் பெற்ற சிவனடியார் சிலர் செந்தமிழ்ப் பக்திப் பனுவல்கள் செய்தனர்.  திருமூ...

மணிமேகலை

            தமிழில் எழுந்த இரண்டாவது காப்பியம் மணிமேகலை.  தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் இரண்டாவது காப்பியம் மணிமேகலை.  தமிழின் முதல் காப்பியம் - தமிழ் நாட்டில் நடந்த கதையைக் கூறும் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்.  சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக மணிமேகலை அமைந்துள்ளது.  சிலப்பதிகாரத்தின் இறுதியில் 'மணிமேகலை மேல் உரைப் பொருள் முற்றிய சிலப்பதிகாரம்"  முற்றும், எனக் கூறப்படுகிறது.  எனவே சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.  இரண்டும் சேர்ந்தே அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் தருவதால், இந்த இரட்டை நூல்களை ஒற்றைப் பெருங்காப்பியமாகக் கருதுதல் உண்டு.     மணிமேகலை காப்பியம் இரு சிறப்புகளில் இரண்டாவதாக நிற்பது போலச் சில சிறப்புகளில் முதலாவதாகவும் நிற்கிறது.  தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை.  காப்பியத் தலைவியின் பெயரையே தலைப்பாகக் கொண்ட முதல் காப்பியம் மணிமேகலை.  பரத்தையின் மகளைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு புரட்சி செய்யும் முதல் காப்பியம் மணிமேகலை.     'ம...

சிலப்பதிகாரம் -சங்கம் மருவிய காலம் (கி.பி.100 -600)

  இலக்கிய புரட்சி      தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்பு முனையாக அமைந்துள்ளது சிலப்பதிகாரம்.  அதுவரையில் நூற்றுக்குக் குறைந்த அடிகளைப் பெற்ற பாடல்களையும் (எட்டுத் தொகை), நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாடல்களையும் (பத்துப்பாட்டு)இயற்றி வந்தனர் சங்கப் புலவர்கள்.  அவை ஓர் உணர்ச்சியை, ஒரு நிகழ்ச்சியை அல்லது ஒருவரது வாழ்வின் ஒரு பகுதியைக் கூறிய தனிப் பாடல்கள்.  சிலப்பதிகாரம், ஒரு முழு வரலாற்றைச் சொல்லும் தொடர்நிலைச் செய்யுளாகச் சுமார் ஐயாயிரம் அடிகளில் இயற்றப்பட்ட முதல் காப்பியம்.  காப்பியம் பெற்ற மொழியே உயர்ந்த மொழி.  தமிழ் அந்த உயரிய நிலையைப் பெறச் செய்தது சிலப்பதிகாரம்.  அதுவரை வெண்பா, அகவற்பாவினையே அதிகமாகப் புலவர்கள் பயன்படுத்த, சிலப்பதிகார ஆசிரியர் நிகழ்ச்சிக்குரிய ஓசை நயத்துக்கேற்ப வேறு வேறு பாக்களைப் பயன்படுத்திப் புதுமை செய்தார்.  உலக மொழிகளின் ஆதி காவியங்கள் அரசனை அல்லது ஆண்டவனைத் தலைவனாக அமைத்துப் பாடப்பட்டவை.  இளங்கோ, குடிமக்களில் ஒருவனாகிய கோவலனைக் காவிய நாயகனாகக் கொண்டார்.  அதனால் இதனைக் குடிமக்கள் காப்பியம் ...

குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை

           குறிஞ்சித்திணைப் பொருளைக் கூறுவதே குறிஞ்சிப் பாட்டு.  இது 261 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவித்தற்கு இதைப் பாடினார் கபிலர் எனும் குறிப்புத் தருகிறார் நச்சினார்க்கினியர், அகப்பொருளே தமிழின் மிகப் பெருஞ்சிறப்பு எனக்கருதியும், ஏறத்தாழ நூறுவகைப் பூக்களின் வேறு வேறு பெயர்களை உரைக்கும் தமிழின் வளத்தையும் தமிழரின் பயிர் நூல் நலத்தையும் கூற ஏற்றது குறிஞ்சித் திணை எனக் கருதியும் கபிலர், இப்பாடலைப் பாடி ஆரிய அரசன் தமிழாற்றலை அறியச் செய்தார் போலும்!  கபிலர், குறிஞ்சி பாடுவதில் வல்லவர்.  அகத்தொகை நூல்களிலும்,பதிற்றுப் பத்து, புறநானூறு ஆகிய புறத்தொகை நூல்களிலும் இவர்தம் புலமை விளங்கும் பாடல்கள் உள்ளன.     தலைவியின் சீரிய அழகு சிதைவதற்குரிய காரணம் களவு என அறியாத செவிலித் தாய்க்குத் தோழி உண்மையை உணர்த்தி அறத்தொடு நிற்றலைத் தெரிவிப்பது இப்பாட்டு.  தோழி அறத்தொடு நிற்றல் ஏழு வகையின என்பர், தொல்காப்பியர்.  அவற்றுள் ஆறு வகையினை உள்ளடக்கியது கபிலரின் பாட்டு.  இதை 'பெருங்குறிஞ்...

நெடுநல் வாடை

            நக்கீரர் இயற்றிய அகப்பொருள் பாடல் ' நெடுநல் வாடை'.  இது 188 அடிகளைக் கொண்ட நேரிசை ஆசிரியப்பா.  இப்பாடலைப் பாடிய நக்கீரர் சங்க காலத்துச் சான்றோர் என்பது உறுதி.     தலைவனைப் பிரிந்து வருத்தும் தலைவிக்கு ஒரு பொழுது ஓர் ஊழி (யுகம்) போல நெடியதாகி வருத்தும் வாடைக் காலம்; பகை ஒருபுறம் இருக்க, மறுபுறம் தலைவியோடு போகம் நுகர்வதை வெறுத்த தலைவன் பகைவன் இருக்கும் வேற்று நாட்டுக்குச் சென்று வெற்றி என்னும் நல்ல விளைவைப் பெறக் காரணமான வாடை-இவ்வாறு நெடுநல் வாடை என்பதற்கு நச்சினார்க் கினியர் காரணம் கூறுவர் .  பூவிடைப் படினும் ஆண்டு கழிந்தது போன்று அல்லலுறும் அன்றிலைப் போன்ற தலைவிக்குப் பிரிந்த ஒரு பொழுதும் ஓர் ஊழியாய் நீளல் இயற்கையே.  துன்பம், எதிர்பார்ப்பு, ஐயம் முதலிய உணர்வுகள் நிறைந்த ஒரு நாளுக்கும் 24 மணி நேரந்தான்:  எனினும் அது 240 மணி நேரம் போலத் தோன்றுவதை அனைவரும் எப்பொழுதேனும் அனுபவித்தே இருப்பர்.  நேச நாடுகள் ஜெர்மனியில் படை வீரரை இறக்கிய இரண்டாம் உலகப் போரின் ஒரு முக்கிய நாளைக் குறித்த நாவலுக்கு The Longest Day...