ஐஞ்சிறு காப்பியங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வழக்குப் பிற்பட்ட காலத்தே தோன்றிய வழக்கு என்பதை முன்னர் கண்டோம். கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டினர் ஆகிய மயிலைநாதர் இவ்வழக்கைப் பயன்படுத்துகின்றார். அதனால் ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கு இதற்கும் பிற்பட்ட காலத்தே தோன்றியிருக்க வேண்டும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனக் கூறும் வழக்குச் சமணர் இடையே வழங்கியதாகலாம் என்று கூறுகின்றார் , தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாககுமார காவியம் என்பனவையே ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும். சூளாமணி சூளாமணியை இயற்றியவர் தோலாமொழித் தேவர். சிரவண பெளகுளாவில் உள்ள ஒரு கல்வெட்டு, மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியை இயற்றிய குணபத்திராச்சாரியார், அவருக்குப் பின் சமணத் துறவியர் பரம்பரையில் வந்த சிந்தாமணி ஆச்சாரியார். அவருக்குப் பின்வந்த சூளாமணி ஆசிரியரான ஶ்ரீ வர்த்தமான தேவர் ஆகியோரை பற்றிக் குறிப்பிடுகின்றது. இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட வர்த்தமான தேவரே, தோலாமொழித் தேவர் என்று சிலர் கூறுவர். சூளாமணிக் ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.