பொய்கையாழ்வார் திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் பொய்கையாழ்வார். இவர் காஞ்சிபுரத்தில் ஒரு மலரில் அவதரித்ததாகக் கூறுவர். இவர், சேரமான் கணைக்கால் இரும் பொறையைச் சிறை மீட்ட பொய்கையார் அல்லர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலப் பொய்கையார். பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமாலின் பாயலான ஆதிசேடன் குடை, சிங்காதனம், புணை , மணி விளக்கு முதலியனவாகப் பணி புரிவதைக் கூறும் பொய்கையார், பக்தர்களும் ஆதிசேடன் போல இறைவனுக்கும் பலவகையிலும் தொண்டாற்றவேண்டும் என்பதைக் குறிப்பால் தெரிவிக்கிறார். சென்றால் குடையாம் ; இருந்தால் சிங்காதனமாம்; நின்றால் மரவடியாம்; நீள் கடலுள் என்றும் புணையாம் ; மணி விளக்காம் ; பூம்பட்டாம்; புல்கும் அணையாம் திருமாற்கு அரவு. திருக்கோவலூரில் ஓர் வீட்டின் இடைக் கழியில், மழைக்காலத்தே முதலாழ்வார்கள் மூவரும் கூடினர். ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம் எனக் கூறி மூவரும் நின்றபோது, நான்காவதாக ஒருவர் அவர்களிடையே ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.