12. களவழி நாற்பது போர்க்களத்து நிகழ்ச்சிகளைப் பாடும் நாற்பது பாக்களைக் கொண்டது, களவழி நாற்பது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் புறப்பொருள் சார்ந்த போரைப் பற்றிக் கூறும் நூல் இஃது ஒன்றே. ' ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்' என்னும் தொல்காப்பிய நூற்பா, ஏர்க்களம் பற்றியும் போர்க்களம் பற்றியும் பாடப்பெறுவது களவழி என்று தெரிவிக்கிறது. களவழி, வாகைத் திணையில் ஒரு துறை, மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய நூற்பாவுக்கு உரை எழுதியவர்கள் களவழி, நாற்பது நூலையும் பாடலையும் மேற்கோளாகக் காட்டியுள்ளனர். பரணி நூலில் 'களம் பாடியது' என்னும் பகுதி களவழி போலவே போர்க்களத்து நிகழ்ச்சிகளை விளக்கும். களவழி நாற்பதில் உள்ள பாடல்களில் ஒவ்வொன்றும் 'களத்து 'என்னும் சொல்லைக் கொண்டு முடிகிறது. இந்நூல் அம்மை என்னும் வனப்பு அமைந்தது. இந்நூலை இயற்றியவர் பொய்கையார். சோழன் கோச்செங்கணானும், சேரமான் கணைக்கால் இரும்பொறையும் போர்'என்னும் ஊரில் பொருதனர். அப்போது சோழன் சேரனை வென்று சிறையிட்டான். புலவர் பொ...
நம் தமிழ் இலக்கியங்களுக்கென்று ஒரு வரலாறு இருப்பது பெருமைக்குரியது. சங்க காலம் முதல் தோன்றிய இலக்கியங்களை வரிசைப்படுத்தி எழுத்தப்பட்டதே இலக்கிய வரலாறு ஆகும்.தமிழ் ஆர்வலர்கள் மட்டும் அறிந்த இந்நூலை அனைவரும் அறியும் நோக்கில் தமிழ் இலக்கிய வரலாற்றை இங்கு பதிவிடுகிறேன்.