முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல் 16, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருவரங்க கலம்பகம் மற்றும் நந்தி

வைணவ சமயத்தைச் சார்ந்த கலம்பக  நூல்களில் சிறப்பு மிக்கது 'திருவரங்கக் கலம்பகம்'. இதை இயற்றியவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார். இவர் கி.பி.17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் 'திவ்ய கவி' என்னும் சிறப்புப் பெயரும், 'அழகிய மணவாளதாசர்' என்னும் வேறு பெயரும் இவருக்கு உண்டு. இவர் இயற்றிய எட்டு நூல்களை இணைத்து 'அஷ்டப் பிரபந்தம்' எனக்கூறுவர். 'அஷ்டப் பிரபந்தம் கற்றவன் அரைப் பண்டிதன்' என்னும் பழமொழி இந்நூல்களின் உயர்வை உரைக்கும் 'திருவரங்கக் கலம்பகம்' அஷ்டப் பிரபந்தம் என்னும் எட்டு நூல்களில் ஒன்றாகும்.                        இக்கலம்பகத்தில் 'மறம்' என்னும் உறுப்பில் அமைந்த பாடல், புலவர் மாலிடம் கொண்ட மாறாக் காதல்,மறம்,நகைத்திறம் ஆகிய மூன்றும் கலந்த முடி மணியாக ஒளி விடுகின்றது. மதுரை கலம்பகம்  மதுரை சோமசுந்தரக் கடவுள் மீது குமரகுருபரர் பாடியது 'மதுரை கலம்பகம்'. இந்நூலின் சிறப்புணர 'அம்மானை' என்னும் உறுப்பில் அமைந்த பாடலைப் பார்ப்போம். அம்மனை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இவ்விளையாட்டுகளில் ஈடுபட்ட மூன்று பெண்களில் ஒருத்தி, ...