ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கில் நாககுமார காவியம் என்னும் பெயரைக் காண்கின்றோம். இந்நூலாசிரியர் சமண சமயத்தவர் என்னும் ஒன்றைத் தவிர இவரைப் பற்றிய வேறு செய்திகள் நமக்குக் கிடைக்கவில்லை; நூலைப் பற்றிய செய்திகளும் கிடைக்கவில்லை.பிற காப்பியச் செய்யுள்களை மேற்கோளாகக் காட்டிய உரையாசிரியர்கள் இக்காப்பியப் பாடலை மேற்கோளாகக் காட்டாததும், பிற காப்பியச் செய்யுள்களைத் தன்னகத்தே கொண்ட புறத்திரட்டில் இக்காப்பியச் செய்யுள் ஏதும் காணப் படாமையும் விந்தையே!
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளுக்கு அடுத்த சிறப்பைப் பெற்ற நூல், நாலடியார். திருக்குறள் இரண்டடிக் குறள் வெண்பாவால் இயன்ற நூல். நாலடியார், நான்கடி வெண்பாக்களால் இயற்றப்பட்ட நூல், குறளின் கருத்தையே ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்கிக் கூறும் அமைப்பைக் கொண்டவையே நாலடியார் பாடல்கள். எனவே இதைத் 'திருக்குறளின் விளக்கம்' என்று கொள்வர். 'நாலடி' என்பதும் இதன் பெயரே. இப்பெயர் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதி பெற்று 'நாலடியார்' ஆனது. நூலில் 400 பாக்கள் இருப்பதால் சங்கத் தொகை நூல்போல, 'நாலடி நானூறு' எனவும் வழங்கப் படுகிறது. பாரதியார் என்பது வேறுள பாரதியார்களைக் குறிக்காமல் சுப்பிரமணிய பாரதியாரையே குறிப்பது போல, நாலடியார் என்பது கீழ்க்கணக்கில் உள்ள நாலடிப் பாக்கள் பெற்ற நூல்கள் எவற்றையும் குறிக்காது நாலடி ஒன்றையே குறிப்பது. இந்நூலின் சிறப்பை உணர்த்தும் 'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி' என்னும் பழமொழியும், 'பழகு தமிழ்ச் சொல்லருமை நால் இரண்டில்' என்னும் தனிப்பாடல் அடியும் நாலடியாரின் புகழைப்...
.jpg)
கருத்துகள்
கருத்துரையிடுக