'தக்கயாகப் பரணியை இயற்றிய ஒட்டக்கூத்தர் சோழப் பேரரசர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். 'கவிராட்சசன் ' எனப் புகழப்படும் இவர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவருலா முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் .
தக்கனும், திருமால், பிரமன், இந்திரன், முதலான தேவரும் போரிட, அவர்களை எதிர்த்து வீரபத்திர தேவர் போரிட்டுப் பெற்ற வெற்றியைக் கூறுகின்றது, தக்கயாகப் பரணி.
தமிழ் வல்ல ஒட்டக்கூத்தர் தம் பரணியில், தமிழ் முனிவரான அகத்தியரைச் சிறப்பிக்கும் பகுதி அறிந்து இன்புறுவதற்குரியது! 'வரதன் ஒரு தமிழ் முனிவரன் ' என்கின்றார் கூத்தர். வீரபத்திரத் தேவரின் பேய்க் கணங்கள், போர்க்காலத்தில் தமிழ்த் தெய்வமான அகத்தியருக்குத் தீங்கு நேரக் கூடாது என்பதற்காக, அவரைப் பிடித்து தமிழ்ப் பொதிய மலைக்குக் கொண்டு போய் , அங்குள்ள குகைக்குள் செல்ல அடைத்ததை "அகத்தியமைத் தமிழ்ப் பொதியிற் குகைப் புக விட்டடைத்தே " எனக் கூறுகின்றார். நூலை முடிக்கும் போதும்.
'வாழி தமிழ்ச் சொற் றெரிந்த நூற்றுறைவாழி தமிழ்க் கொத்த தனைத்து மார்க்கமும் '
என்று வாழ்த்துகின்றார்.
பரணி இலக்கியங்களுள் தக்கயாகப் பரணிக்கு ஒரு தனித்த இடம் உண்டு.
0 கருத்துகள்