Looking For Anything Specific?

உலா

     தலைவன் வீதியில் உலா வர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை , தெரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகும். இது கலிவெண்பாவால் பாடப்பெறும்.  இவ்வாறு காதல் கொள்ளுதல் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார்.  'பெருங்கதை' காப்பியமும்,

'உத்தம மகளிர் ஒழிய மற்றைக் 
கன்னியர் எல்லாம் காமன் துரந்த 
கணையுளம் கழியக் கவினழிவு '

எய்தி வருந்தியதாகக் கூறும்.  எனவே உலா கண்டு காதல் கொள்ளும் மகளிர் குலமகளிர் அல்லர் என்பது தெளிவு.

    ஏழு பருவத்தின் வயது முறையைப் பின்வருமாறு கூறுவர் , பேதை 5 - 7, பெதும்பை 8 - 11, மங்கை 12 - 13, மடந்தை 14 - 19, அரிவை 20 - 25 , தெரிவை 26- 32, பேரிளம் பெண் 33 - 40 ஆண்டுகள்.

    இவ்விலக்கியத்தில், பாட்டுடைத் தலைவன் சிறப்பு, நீராடல், ஒப்பனை செய்தல், பரிவாரங்கள் புடைசூழத் தன் ஊர்தியில் ஏறி உலா வரல் ஆகியவற்றை உலாவின் முன்னிலை எனவும், ஏழு பருவ மாதர் கூடித் தனித் தனியாகக் கூறுவன  உலாவின் பின்னிலை எனவும் கூறுவர் .

    திருக்கைலாய  ஞான உலா, திருவாரூர் உலா , திருப்பூவணநாதர் உலா, திருக்காளத்தி நாதர் உலா, ஏகாம்பர நாதர் உலா, திருக்கழுக்குன்றத்து உலா, விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா முதலியனவாக உலா நூல்கள் பல உள்ளன.




கருத்துரையிடுக

0 கருத்துகள்