Looking For Anything Specific?

திருக்கைலாய ஞான உலா

 திருக்கைலாயத்தில் நிகழ்ந்த சிவபெருமானின் உலாவைப் புகழ்ந்து பாடும் நூலே திருக்கைலாய ஞான உலாவாகும்.  முதலில் தோன்றிய உலா இதுவே என்பதால் இதனை 'ஆதி உலா' என்றும் கூறுவர் .

    இந்நூலை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார் . இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார் .

    சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பராவார்.  இவர் பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.

    சுந்தரராகிய நம்பி ஆரூரர் இறைவனால் அனுப்பப்பட்ட வெள்ளை யானையில் ஏறிக் கைலை அடைந்தார்.  சேரமான் பெருமாள் தம் குதிரையில் ஏறிச் சென்று கைலையடைந்தார்.  சேரமான் பெருமாள் தம் குதிரையில் ஏறிச் சென்று கைலையடைந்தார்.  அங்கே சிவபெருமானின் திருமுன்னர் தமது 'திருக்கைலாய ஞான உலா' வை அரங்கேற்றினார்; இவ்வுலா சைவத் திருமுறைகளில் பதினோராந் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

    சிவபெருமான் உலா வரும் தெருக்களில் உள்ள உயர் மாடங்கள், சிவபெருமான் வடிவினைப் பெற்றுத் திகழ்வதாகச் சேரமான் கூறுகின்றார்.






கருத்துரையிடுக

0 கருத்துகள்