Looking For Anything Specific?

கலம்பகம்

     பலவகை வண்ணமும், வடிவமும், வாசகமும் நிறைந்த மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையைக் கதம்பம் என்றாற் போலப் பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பல்வகைச் செய்யுளால் கலந்து பாடப் பெறும் சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது.

    இவ்வாறு பாடப்பெறும் கலம்பத்தின் செய்யுள் தொகை, கடவுளர்க்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்க்கு முப்பது என்னும் அளவில் அமைய வேண்டும் என்பதும் விதி.  இவ்வளவினை மீறிய கலம்பகங்களும் உண்டு.  திருக்கலம்பகத்தில் 110 செய்யுட்களும், ஆளுடைய பிள்ளை கலம்பகத்தில் 49 செய்யுட்களும் உள்ளன.

    கலம்பகம், பெரும்பான்மை அகத்திணைச் செய்திகளையையும் , சிறுபான்மை புறத்திணைச் செய்திகளையும் அவற்றின் துறைகளையும் பெற்றுத் திகழும்.

    கலம்பகங்கள் கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டு முதல் தோன்றலாயின எனக் கூறுவர் .  காலத்தால் முற்பட்ட கலம்பகம், நந்திக் கலம்பகம், திருவெங்கைக் கலம்பகம், அழகர் கலம்பகம், மதுரைக் கலம்பகம், கச்சிக் கலம்பகம்,தில்லைக் கலம்பகம், திருக்காவலூர்க் கலம்பகம் முதலியன கலம்பக நூல்களில் புகழ் பெற்றவை.




கருத்துரையிடுக

0 கருத்துகள்