கலம்பக நூல்களில் மிகப் பழமையான நந்திக் கலம்பகம், ஒரு வரலாற்று நூலாகத் திகழும் தனிச் சிறப்புப் பெற்றது. தெள்ளாறெறிந்த நந்திவர்மன் என வழங்கப் பெறும் மூன்றாம் நந்திவர்மன் மீது பாடப்பட்ட நூல் இது. மூன்றாம் நந்திவர்மன் கி.பி. 825 முதல் 850 வரை ஆண்டவன். நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் இன்னார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. நந்திவர்மனின் மாற்றாந்தாய் மக்கள் நால்வரில் ஒருவன், இவனைக் கொல்வதற்காகவே வசை வைத்து இந்நூலைப் பாடினான் என்றும், பாடியவனின் பெயர் 'காடவன்' என்…
மேலும் படிக்க »பலவகை வண்ணமும், வடிவமும், வாசகமும் நிறைந்த மலர்களைக் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையைக் கதம்பம் என்றாற் போலப் பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பல்வகைச் செய்யுளால் கலந்து பாடப் பெறும் சிற்றிலக்கியம் கலம்பகம் எனப்பட்டது. இவ்வாறு பாடப்பெறும் கலம்பத்தின் செய்யுள் தொகை, கடவுளர்க்கு நூறு, முனிவர்க்குத் தொண்ணூற்றைந்து, அரசர்க்குத் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்க்கு முப்பது என்னும் அளவில் அமைய வேண்டும் என்பதும் விதி. இவ்வளவினை மீறிய கலம்பகங்களும் உண்டு.…
மேலும் படிக்க »பெண்பாற் பிள்ளைத் தமிழில் மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழுக்கு அடுத்த நிலையில் விளங்கும் சிறப்புப் பெற்றது. 'திருநெல்வேலிக் காந்தியம்மை பிள்ளைத் தமிழ்'. இந்நூலைப் பாடியவர் திருநெல்வேலியைச் சார்ந்த தச்சன் நல்லூரில் வாழ்ந்த அழகிய சொக்கநாதர். இவர் பத்தொன்பதாம் நூற்றாண்டினர் .
சிறுமி காந்தியம்மையைக் கவிஞர் 'வருக வருக' என்றழைக்கும் வருகைப் பருவம் சிறப்பு மிக்கது .
வாரா திருந்தால் இனிநான் உன் வடிவேல் விழிக்கு மைஎழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால் இ…
இந்நூலையும் குமரகுருபரரே பாடினார். குமரகுருபரர் தருமபுரம் சென்று அங்கிருந்த மாசிலாமணி தேசிகரிடம் ஞானோபதேசம் பெற விரும்வினார். தேசிகரின் விருப்பப்படி சிதம்பரம் செல்லப் புறப்பட்ட குமரகுருபரர் வழியில் வைத்தீஸ்வரன் கோயிலை அடைந்தார். அங்கே எழுந்தருளி இருக்கும் குமரக் கடவுளைக் கண்டு, காதல் மீதூறத் தொழுது, பின்பு அவர் மீது 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' பாடினார். வைத்தீஸ்வரன் கோயில் என்று இன்று வழங்கப்பெறும் ஊரின் பழைய பெயர், புள்ளிருக்கு வேளூர் என்பதாகும். …
மேலும் படிக்க »ஐந்தாண்டு வரை பேசாத ஊமைக் குழந்தையாயிருந்து பின்னர் தமிழ் வெள்ளம் பெருகிப் பாடும் பாடல்கள் பாடித் தமிழை வளர்த்த பெரும் புலவர் குமர குருபரர். இவர் கி.பி. 17ம் நூற்றாண்டில் பிறந்தார். இவர் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழே, பிள்ளைத் தமிழ் நூல்களில் தலைசிறந்தது. திருமலை நாயக்கர் முன்னிலையில் குமரகுருபரர் இந்நூலை அரங்கேற்றும்போது, மீனாட்சியம்மையே சிறுமி வடிவில் அவைக்கு வந்து இந்நூலைக் கேட்டு அகமகிழ்ந்து அருள் புரிந்தாள் எனக் கூறுவர் .முத்தப் பருவத்தில்,காலத் தொடுகற் பன…
மேலும் படிக்க »தான் போற்றும் தெய்வத்தையோ அரசனையோ, சான்றோரையோ குழந்தையாக்கிப் பார்த்துப் பரவசத்துடன் பாடப்படும் சிற்றிலக்கியம், "பிள்ளைத் தமிழ்". இதனைப் பிள்ளைப் பாட்டு என்றும், பிள்ளைக்கலி என்றும் வழங்குவது உண்டு. குழந்தையின் மூன்றாம் திங்கள் முதல் இருபத்தோராம் திங்கள் வரை, இரண்டு திங்களுக்கு ஒரு பருவமாகப் பகுத்துக் கொள்வது மரபு. எனவே மூன்று, ஐந்து , ஏழு, ஒன்பது, பதினொன்று, பதிமூன்று, பதினைந்து, பதினேழு, பத்தொன்பது, இருபத்தொன்று எனப் பத்துப் பருவங்கள் அமையும்.
அவ்வப் பருவ…
திருமாலிருஞ் சோலையில் எழுந்தருளியுள்ள சௌந்தரராகவாப் பெருமாள் பவனி வரும்போது கண்டு காதல் கொண்ட தலைவி கிள்ளையைத் தூது விட்டதாக அமைந்த நூலே 'அழகர் கிள்ளை விடு தூது'. இதனைப் பாடியவர், பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். இந்த நூலில் கிள்ளையின் பெருமையைக் கூறும் பகுதி நெஞ்சையள்ளும் சுவைமிக்கது.பால்குடிக்கும் பச்சைக் குழந்தை நீ யானாலும் கால்பிடிப்பார் கோடிப்பேர் கண்டாயே - மால்பிடித்தோர் கைச்சிலை வேலால் வருந்தும் காமநோய் தீர்ப்பதற்கோ பச்சிலை ரூபம் படைத்திருந்தாய்.வண்டுவிடு தூது …
மேலும் படிக்க »தன் உள்ளத்துக்குகந்த ஒரு பொருளையே தூதுப் பொருளாகத் தேர்ந்தெடுப்பது சிறப்புடைத்து. தமிழினும் உள்ளத்துகந்த பொருள் எது? அதனால் தமிழ் வளர்க்கும் மதுரையில் குடியிருக்கும் சொக்கநாதர் மீது மிக்க காதல் கொண்ட காரிகை, தன் காதல் நோயை அவரிடம் தக்கபடி உரைத்து தமிழைத் தூது விட்டாள். அதுவே 'தமிழ் விடு தூது'. 'தமிழ் விடு தூது' என்னும் சிறந்த தூது நூலை இயற்றியவர் இன்னார் என்பது தெரியவில்லை. தமிழையே உணவாய், உணர்வாய், உயிராய்க் கொண்ட தண்டமிழ்ப் பக்தர் - தாய் மொழிப்…
மேலும் படிக்க »சிற்றிலக்கியங்களில் ஒன்றான 'தூது' தொல்காப்பியக் காலத்தும் இலக்கியப் பிரிவாக இருந்த ஒன்று. ஒருவரிடம் ஒரு பொருளைப் பெற்று வருவதற்கு ஆற்றல் மிக்க மற்றொருவரை அனுப்புவது தூது. போர்க்காலத்தே மன்னர் தூதனுப்புவது பண்டைய மரபு. ஒளவையாரும் அதிகமானின் தூதராகத் தொண்டைமானைக் கண்டு வந்ததைப் புறநானூறு உணர்த்தும். இது புறத்திணை சார்ந்த தூது. அகத்திணை சார்ந்த தூது, "காமம் மிக்க கழிபடற்கிளவி" யாகவே அமைந்துள்ளது. அஃறிணைப் பொருள்கள் தாம் கூறுவனவற்றைப் பிறரிடம் கூறும் ஆற…
மேலும் படிக்க »V . நாயக்கர் காலம் கி.பி. 1350 - 1750சிற்றிலக்கியங்கள் சங்க காலத்தில் குறுகிய அடிகளைப் பெற்ற தனிப் பாடல்களும், நூற்றுக்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட பாட்டுகளும், பொருள் தொடர்நிலையாக வரும் காப்பியங்களும் பெற்றுச் சிறந்திருந்தது, தமிழ். தனிப் பாடல்களின் தொகுதிகள், எட்டுத் தொகை நூல்கள். பாட்டுகள் பத்தின் தொகுப்பே, பத்துப்பாட்டு. காப்பியங்களாக உருவானவையே சிலம்பும் மேகலையும்.
தமிழ் மொழியின், இலக்கணத்தை வகுத்த தொல்காப்பியர், ஏற்கனவே இருந்த இலக்கியங்களைக் கண்டு அவற்றிற்கு இ…
விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராசன் சோழன் உலா ஆகிய மூன்றும் மூவருலா என வழங்கப் பெறும் மூன்றையும் இயற்றியவர் ஒட்டக்கூத்தர். கலம்பகங்களில் நந்திக் கலம்பகம் தமிழக வரலாறு கூறும் நூலாகத் திகழ்வது போல, உலா நூல்களில் மூவருலா வரலாற்று நூலாக அமைந்துள்ளது.
விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராசன் ஆகிய மூவர் அவையிலும் வீற்றிருந்த பேறு பெற்றவர், ஒட்டக்கூத்தர். இதனால் சோழர் வரலாற்றைத் துல்லியமாக அறியும் வாய்ப்புக் கிடைத்தது. தாமறிந்த வரல…
திருக்கைலாயத்தில் நிகழ்ந்த சிவபெருமானின் உலாவைப் புகழ்ந்து பாடும் நூலே திருக்கைலாய ஞான உலாவாகும். முதலில் தோன்றிய உலா இதுவே என்பதால் இதனை 'ஆதி உலா' என்றும் கூறுவர் . இந்நூலை இயற்றியவர் சேரமான் பெருமாள் நாயனார் . இவரது இயற்பெயர் பெருமாக் கோதையார் .
சேரமான் பெருமாள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் நண்பராவார். இவர் பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா ஆகிய மூன்று சிற்றிலக்கியங்கள் இயற்றியுள்ளார்.
சுந்தரராகிய நம்பி ஆரூரர் இறைவனால் அன…
தலைவன் வீதியில் உலா வர, அவனைப் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை , தெரிவை, பேரிளம் பெண் என்னும் ஏழு வகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியமாகும். இது கலிவெண்பாவால் பாடப்பெறும். இவ்வாறு காதல் கொள்ளுதல் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது என்று நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். 'பெருங்கதை' காப்பியமும்,'உத்தம மகளிர் ஒழிய மற்றைக் கன்னியர் எல்லாம் காமன் துரந்த கணையுளம் கழியக் கவினழிவு ' எய்தி வருந்தியதாகக் கூ…
மேலும் படிக்க »'தக்கயாகப் பரணியை இயற்றிய ஒட்டக்கூத்தர் சோழப் பேரரசர்களிடம் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். 'கவிராட்சசன் ' எனப் புகழப்படும் இவர், குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், காங்கேயன் நாலாயிரக் கோவை, மூவருலா முதலிய வேறு நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் . தக்கனும், திருமால், பிரமன், இந்திரன், முதலான தேவரும் போரிட, அவர்களை எதிர்த்து வீரபத்திர தேவர் போரிட்டுப் பெற்ற வெற்றியைக் கூறுகின்றது, தக்கயாகப் பரணி.
தமிழ் வல்ல ஒட்டக்கூத்தர் தம் ப…
பரணி இலக்கியங்களில் மிகவும் பழமையானது 'கலிங்கத்துப் பரணி'. இதுவே பரணி நூல்களில் தலை சிறந்தது என்று, அன்று முதல் இன்று வரை போற்றப்படுகின்றது. கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார். இவர் தீபங்குடி என்னும் ஊரினர். இவர் கி.பி. 1070 முதல் 1118 வரை ஆண்ட முதல் குலோத்துங்கன் காலத்தவர். குலோத்துங்கனின் படைத் தலைவனான கருணாகரத் தொண்டைமான், சோழப் பெரும் படையுடன் கலிங்க நாடு சென்று, வாகை சூடித் திரும்பினான். அதன் பின் குலோத்துங்கன் , சயங்கொண்டாரிடம் உரையாடிய போது , …
மேலும் படிக்க »'ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்கு வகுப்பது பரணி.' என்பது இலக்கண விளக்கத்தின் கூற்று. போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற மாவீரனைச் சிறப்பித்துப் பாடுவதே பரணி என்னும் சிற்றிலக்கியமாகும் .
பரணி என்பது ஒரு நட்சத்திரத்தின் பெயர். போர்க் குரிய தெய்வமாகிய காளி (கொற்றவை)க்குரிய நாள் பரணி. எனவே வெற்றி பெற்ற வேந்தன் பரணி நாளில் கொற்றவைக்குக் கூழ் அட்டுப் படைத்துக் கொண்டாடுவது மரபாகும்.
பரணி பலவகை உறுப்புக்களைக் கொண்டது. அவை கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, காடு பாட…
சங்ககாலத்துக்குப் பின்னே தோன்றிய காப்பியங்கள் யாவும் சமயக் காப்பியங்களே. பெரிய புராணமும் ஒரு சமயக் காப்பியம்; சைவக் காப்பியம்; மற்றக் காப்பியங்கள் வடமொழித் தழுவலாக வந்த காப்பியங்கள். பெரிய புராணமோ, சிலப்பதிகாரம், மணிமேகலை போலத் தமிழ் நாட்டின் சொந்தக் காப்பியம்; தமிழக வரலாற்றுக் காப்பியம்.காப்பியக் கவிஞர் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றியவர் சேக்கிழார். தமிழின் முதல் காப்பியமான சிலப்பதிகாரத்தை இயற்றியவர், செங்குட்டுவன் என்னும் சேரமன்னனின் தம்பி. சைவத்தின் முதல் தம…
மேலும் படிக்க »"கல்விச் சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு" செந்தமிழ் நாட்டின் சிறப்புகளைக் கூற வந்த பாரதியார், கம்பன் பிறந்ததால் கல்வியில் சிறந்த தமிழ்நாடு பெருமையுற்றதைக் கூறுகிறார். கம்பர் தமிழ் இலக்கிய உலகை ஒளியுறச் செய்த உதய சூரியன். ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல வந்த மாக்கவிஞர்; மற்றக் கவிஞர்கள் இவர் முன் குன்றுகளாகக் குன்றிப் போக இமயமாக எழுந்து நிற்கும் புலவர் திலகம், கம்பர்.'கல்வியிற் பெரியவர் கம்பர்'
'கம்பர் வீட்டுக் கட்டுத…