நாட்டையும் மக்களையும் காப்பதைக் கடனாகக் கொண்ட தமிழ் மன்னர்கள், மொழியைக் காப்பதையும் முக்கிய கடமையாகக் கருதினார்கள். சேர சோழ பாண்டியராகிய மூவேந்தர்களும் புலவர்களை ஆதரித்து மொழியின் சிறப்புக்கும் இலக்கிய வளர்ச்சிக்கும் துணைநின்றனர். அவருள்ளும் பாண்டியர் சங்கம் கண்டு தமிழ் வளர்த்த பெருமை பெற்றனர். இதனால் செந்தமிழையும் செழியனையும் இணைத்துப் பேசும் மரபும் ஏற்பட்டதைப் பின்வரும் சான்றுகள் விளக்கும்.
"வீயாத் தமிழுடையான்
பல்வேற் கடற்றானைப் பாண்டியன்"
- யாப…
எட்டுத்தொகை நூல்களில் தமிழர் மிகவும் ஏற்றிப் போற்றும் தனிச் சிறப்புப் பெற்றது. புறநானூறு கடவுள் வாழ்த்து உட்படப் புறப்பொருள் பற்றிக் கூறும் நானூறு பாடல்கள் கொண்டதால் இது இப்பெயர் பெற்றது. இந்நூலைப் புறம், புறப்பாட்டு , புறம் நானூறு எனும் வேறு பெயர்களாலும் குறிப்பிட்டார்கள். புறநானூற்றுப் பாடல்களின் அடிவரையறை கூற முடியாதவாறு பல பாடல்கள் சிதைந்து உள்ளன. 267, 268 ஆகிய இரு பாடல்கள் முற்றிலும் மறைந்து விட்டன.
இந்நூலைப் பாடியோர் ஒரு நாட்டார் அல்லர்; ஒரு காலத்தார் அ…
முன்னே கண்ட நான்கும் (குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு) ஆசிரியப்பாவால் அமைந்த அகப்பொருள் தொகை நூல்கள். கலித்தொகை கலிப்பாவால் அமைந்தது. கலிப்பாவும், பரிபாடல் என்னும் பாவும் அகப்பொருள் பாட ஏற்றவை என்கின்றது, தொல்காப்பியம்.
"நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கினும்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர்"
இச் சூத்திரத்தால் தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே அகப்பொருள் இலக்கியத்தில் கலிப்பாவும் பரிபாடலும் முத…
ஐந்திணை ஒவ்வொன்றுக்கும் நூறு பாடல் வீதம் பெற்ற ஐந்நூறு பாடல்கள் கொண்டது, ஐங்குறுநூறு. இதன் பாடல்கள் மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும் கொண்டவை. ஆசிரியப்பாவின் சிற்றெல்லையே மூன்றடி தான் என்பது இங்கே நினைக்கத் தக்கது; குறுந்தொகையினும் குறுகிய அடிகள் பெற்ற பாக்களைக் கொண்டது என்னும் பொருளில் ஐங்குறுநூறு என்னும் பெயரிடப் பெற்றது. நூலின் முன்னே கடவுள் வாழ்த்துச் செய்யுள் ஒன்று உள்ளது. இதன் 129, 130 ஆகிய பாடல்கள் மறைந்து போயின.
இத் தொகைநூலைத் தொகுப்பித்தோன் ய…
நற்றிணைப் பாடல்களிலும் நெடிய பாடல்களைக் கொண்ட தொகை நூல் அகநானூறு. இதன் பாடல்களின் அளவு சிறுமை 13 அடி. பெருமை 31 அடி. இந்நூல் நெடுந்தொகை நானூறு என்னும் பெயரையே முதலில் பெற்றிருந்தது. இத்தொகை நூலின் பாயிரமும் 'முன்னர் தொகுத்த நல் நெடுந்தொகைக்கு' என்று குறிப்பிடுகிறது. அகநானூற்றுப் பாயிரத்தை இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்வதரையன் பாடியுள்ளான். பின்னர் அது அகம், அகப்பாட்டு, அகநானூறு என வழங்கப்பட்டது.
நூலைத் தொகுப்பித்தோன் பாண்டியன் உக்கிரப்ப…
குறுந்தொகை அடிகளிலும் மிக்கு, ஒன்பதடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டடிப் பேரெல்லையும் கொண்ட பாடல்களின் தொகுதி நற்றிணை. திணை என்னும் சொல் ஆகுபெயராய் அகத்திணை நூலைக் குறிக்கிறது. ' திணை எழுபது' முதலிய நூற்பெயரிலும் இத்தன்மையைக் காணலாம். சிறிய பாடல்களும் இன்றிப் பெரிய பாடல்களும் இன்றி அளவான பாடல்களைப் பெற்றமையால் இத்திணை, நல் என்னும் அடைமொழி பெற்று 'நற்றிணை'யாயிற்று, என்பர். இதன்கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக 400 பாடல்கள் உள்ளமையால் இது 'நற்றிணை நானூறு'…
மேலும் படிக்க »எட்டுத் தொகை நூலில் முதலில் தொகுக்கப்பட்ட நூல், இது. இதற்குக் 'குறுந்தொகை நானூறு' என்றும் பெயர் இருந்ததை இறையனார் களவியல் உரையால் அறியலாம். இதன் சிற்றெல்லை நான்கு அடி; பேரெல்லை எட்டடி.
தற்போது கிடைக்கும் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 401 பாடல்கள் உள்ளன. 307, 391 ஆகிய இரு பாடல்களும் குறுந்தொகையின் பேரெல்லையை மீறி ஒன்பது அடிகள் பெற்றுள்ளன. 391 ஆம் பாடல் சில பாட பேதங்களுடன் எட்டடியாகச் சில ஏடுகளில் எழுதப்பட்டுள்ளது. 307 ஆம் பாடல் எல்லா ஏடுகளிலும் ஒன்பது …
ஒரு மொழி தோன்றிப் பல்லாயிரம் ஆண்டுகளின் வளர்ச்சிக்குப் பின்னரே இலக்கண அமைதி நிறைந்த பாட்டுத் தோன்ற முடியும். பலர் எழுதிய பல நூறு பாடல்களைத் திரட்டி ஒரு குறிப்பிட்ட வரையறையுடன் தொகுத்துத் தொகை நூலாக்க இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் பிடிக்கும். தொகை நூல்களின் தேவையை முற்றிலும் உணர்ந்து கதைகள், கவிதைகள், அறிவியல் கட்டுரைகள், பழமொழிகள், பொன்மொழிகள் முதலிய தொகை நூல்கள் ஒவ்வொரு மொழியிலும் எண்ணிறந்தன எழுந்த காலம் இருபதாம் நூற்றாண்டே. தொகை நூல் என்பது ஒரு மொழியின் இலக்கிய ஏற்றத்தைக்…
மேலும் படிக்க »'தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாடினார் நாமக்கல் கவிஞர். தமிழனைத் தலைநிமிர்த்தி நிற்குமாறு செய்வதே சங்க இலக்கியந்தான். இலக்கியம் வாழ்வின் கண்ணாடி என்றும், காலத்தைக் காட்டும் கண்ணாடி என்றும் கூறுவர். இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையைக் கற்பனைக் கலப்பின்றிப் படம் பிடிக்கும் அற்புதக் கண்ணாடியே சங்க இலக்கியம்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததையும், முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்தத…
தொன்மைத் தமிழில் தோன்றிய நூல்களில் இன்று நமக்குக் கிடைப்பனவற்றுள் மிக மிகத் தொன்மையானது தொல்காப்பியம். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலிய நூல்களுக்குக் காலத்தால் மூத்தது, தொல்காப்பியம்.
தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல். இதனை இயற்றிய தொல்காப்பியர், அகத்தியரின் பன்னிரு மாணவர்களில் ஒருவர் என்பவர். இக்கூற்றிற்குப் போதிய சான்றுகள் இல்லை. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்தமிழ் கூறும் நல்லுலகத்தில் வழங்கிய பேச்சு மொழியினையும் இலக்கிய மரபினையும் ஆராய்ந்து, தமக்க…
கி.மு. 500 - கி.பி.100
'திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்'
என்கிறார், பாவேந்தர் பாரதிதாசன். 'என்றுமுள தென் தமிழ்' என்பதும் இதே கருத்தையே தருகிறது. தமிழ் இல்லாத காலம் இத்தரணியில் இல்லை என்பதே சான்றோர்களின் துணிவு. உலகின் முதல் மொழியாக, அல்லது உலகில் தோன்றிய சில மொழிகளில் ஒரு மொழியாக - உயர்ந்த மொழியாகத் தமிழ் விளங்குகிறது. தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும் என்று பிறந்தவ…