தொண்டரடிப் பொடியாழ்வார் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் முன் குடுமிச் சோழிய அந்தணர் குலத்தில் தோன்றியவர் தொண்டரடிப் பொடியாழ்வார். இவரது இயற்பெயர் விப்பிர நாராயணர். இவர் திருவரங்கத்தில் ஒரு நந்தவனம் அமைத்து, திருமாலுக்குப் பூமாலைகளையும், துளசி மாலைகளையும் சமர்ப்பித்துப் பெரியாழ்வாரைப் போல மலரத் தொண்டாற்றி வந்தார்.
உறையூரில் சோழன் அவையில் ஆடல் நிகழ்த்திப் பெரும் பரிசு பெற்றுத் திரும்பிய தேவதேவி என்னும் தாசி, இவரது நந்தவனத்தில் தற்செயலாகத் தங்க நேர்ந்தது. இவ…
நம்மாழ்வார் ஆழ்வார்களுள் மிகவும் போற்றப்படுபவர், நம்மாழ்வார். இவர் மாறன் காரிக்கும், உடைய நங்கைக்கும் மகவாகத் திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரில் பிறந்தார். பிறப்பு முதலே யோகத்தில் ஆழ்ந்து பதினாறாண்டுகள் ஒரு புளிய மரத்தடியில் இருந்தார். இவருக்குச் சடகோபன், காரிமாறன், வகுளாபரணன், பராங்குசன் என்னும் பெயர்கள் உள்ளன.
இவரது காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு. இந்நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகன் நெடுஞ்சடையன் காலத்தில் அமைச்சராய்த் திகழ்ந்த மாறன் காரியே நம்மாழ்வாரின் …
காஞ்சிபுரத்துக்கு அருகேயுள்ள திருமழிசையில் பார்க்கவர் என்னும் முனிவரின் புதல்வராக அவதரித்தவர் திருமழிசையாழ்வார். இவரைப் பக்திசாரர் என வழங்குவர். இவர் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர். திருமழிசையாழ்வார் முதலாழ்வார்களைப் போலச் சமயப் பொறையுடையவர் அல்லர். இவர் சமய வாதம் செய்து பிற சமயத்தினரை வென்றார். தம் பாடல்களிலும் பிற சமயத்தினரைக் கண்டித்தார்.
'அறியார் சமணர் அயத்தார் பௌத்தர் சிறியார் சிவப் பட்டார்கள்.' 'நிற்கின்ற தெல்லாம் நெடுமால் என்று ஒராதா…
பொய்கையாழ்வார் திருமாலின் பாஞ்சசன்யம் என்னும் சங்கின் அவதாரமாகக் கருதப் பெறுபவர் பொய்கையாழ்வார். இவர் காஞ்சிபுரத்தில் ஒரு மலரில் அவதரித்ததாகக் கூறுவர். இவர், சேரமான் கணைக்கால் இரும் பொறையைச் சிறை மீட்ட பொய்கையார் அல்லர். கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிற்காலப் பொய்கையார். பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் இருவரும் சம காலத்தில் வாழ்ந்தவர்கள். திருமாலின் பாயலான ஆதிசேடன் குடை, சிங்காதனம், புணை , மணி விளக்கு முதலியனவாகப் பணி புரிவதைக் கூறும் பொய்கையார், பக்தர்களும் ஆதிச…
மேலும் படிக்க »வைணவம் சங்க காலத்திலேயே தமிழகத்தில் வேரூன்றிய சமயம். "மாயோன் மேய காடுறை உலகம்" என்றும்,"மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பில்
தாவா விழுப்புகழ் பூவைநிலையும்' என்றும் தொல்காப்பியம் கூறும் நூற்பாக்கள் மாயோனாகிய திருமாலின் சிறப்பை உணர்த்தும்,'கணங்கொள் அவுணர் கறந்து பொலந்தார்
மாயோன் மேயஒண் நன்னாள்; - மதுரைக் காஞ்சி 'புள்ளணி நீள்கொடிச் செல்வன்'. - திருமுருகாற்றுப்படை 'காந்தளம் சிலம்பில் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ' - பெரும்பாண் ஆ…
'திருவாசகத்து உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்' என்னும் பழமொழி எழுமளவு ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் திருவாசகத்தை வழங்கியவர் மாணிக்கவாசகர். திருவாதவூரர் என்னும் இயற்பெயர் பெற்று இவர் கற்றுத் தேர்ந்தவராகி, அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராகப் பணியாற்றினார். வேந்தனுக்காகக் குதிரைகள் வாங்கத் திருப்பெருந் துறைக்குச் சென்ற மாணிக்கவாசகர், வழியில் குருவடிவில் திகழ்ந்த சிவபெருமானால் ஆட்கொள்ளப் பெற்றார். அதனால் குதிரை வாங்கக் கொண்டு வந்த பொருளைச் சிவாலயத் திருப்பணிக்குச்…
மேலும் படிக்க »செந்தமிழ் வல்ல சுந்தரர் திருமுனைப் பாடி நாட்டில், திருநாவலூரில் சடையனார்க்கும், இசை ஞானியார்க்கும் தவப் புதல்வராக அவதரித்தார். இவரது இயற்பெயர் நம்பி ஆரூரர். நரசிங்க முனையரையர் என்னும் நாடாளும் மன்னன் இவரைத் தம் சுவிகாரப் புதல்வனாக எடுத்து வளர்த்தான். கைலையில் சிவபிரானுக்கு அணுக்கத் தொண்டராக விளங்கிய ஆலால சுந்தரரே இந்த நம்பி ஆரூரர். அதனால் ஆரூரர், திருமணம் செய்து கொள்ளும் தருணத்தில் முக்கண்ணன் முதியவன் வடிவத்தில் வந்து இவரைத் தடுத்தாட்கொண்டான். பின், இவர் 'பித…
மேலும் படிக்க »திருஞான சம்பந்தருக்கு முன்பே தோன்றியவர், திருநாவுக்கரசர். முதலாம் மகேந்திரவர்மனைச் சைவ சமயம் மேற்கொள்ளச் செய்த செயலினால் இச்சான்றோரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.திருநாவுக்கரசர் திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருவாமூரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். தந்தையார் பெயர் புகழனார். தாயார் பெயர் மாதினியார். திருநாவுக்கரசரின் இளமைப் பெயர் மருள் நீக்கியார். பெற்றோரை இழந்த நாவுக்கரசரை இவருடைய தமக்கையார் வளர்த்து வந்தார். திருநாவுக்கரசர் சமண சமய நூல்களைப…
மேலும் படிக்க »