'யசோதர காவியம்' என்னும் சிறு காப்பியம் வட மொழிக் கதையைத் தழுவி எழுதப்பட்டது. இக்காவியம் கூறும் யசோதரன் முதலான மாந்தர்களின் வரலாறு வேறெந்தத் தமிழ் நூலிலும் குறிக்கப் பெற வில்லை. ஆனால் வடமொழியில் யசோதரன் வரலாறு கூறும் நூல்கள் பல உள. மகாபுராணத்தின் இரண்டாம் பகுதியான உத்திர புராணத்தைக் குணபத்திரர் இயற்றினார். இப்புராணத்தில் தான் முதன் முதலில் யசோதர காவியக் கதை கூறப்படுகின்றது. இக்கதையைச் சோமதேவ சூரி என்பவர், "யசஸ் திலகம்" என்னும் பெயரிலும், வாதி ராச சூ…
மேலும் படிக்க »ஐஞ்சிறு காப்பியங்கள் ஐம்பெருங் காப்பியங்கள் என்னும் வழக்குப் பிற்பட்ட காலத்தே தோன்றிய வழக்கு என்பதை முன்னர் கண்டோம். கி.பி. 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டினர் ஆகிய மயிலைநாதர் இவ்வழக்கைப் பயன்படுத்துகின்றார். அதனால் ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வழக்கு இதற்கும் பிற்பட்ட காலத்தே தோன்றியிருக்க வேண்டும் ஐஞ்சிறு காப்பியங்கள் எனக் கூறும் வழக்குச் சமணர் இடையே வழங்கியதாகலாம் என்று கூறுகின்றார் , தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். சூளாமணி, யசோதர காவியம், உதயண குமார காவியம், நீலகேசி, நாகக…
மேலும் படிக்க »ஐம்பெருங் காப்பியங்களுள் மணிமேகலையைப் போலக் குண்டலகேசியும் பௌத்த காப்பியம் ஆகும். சிலம்பு, சிந்தாமணி, வளையாபதி ஆகிய மூன்றும் சமணக் காப்பியங்கள். குண்டலகேசி சமய வாதம் பேசும் காப்பியமாகும். இக்காப்பியம் கிடைக்கவில்லை. பழைய உரையாசிரியர்கள் இக்காப்பியக் கவிதைகளைத் தம் நூல்களில் மேற்கோளாக எடுத்துக் காட்டியுள்ளனர். அப்பாடல்களைக் கொண்டும், அவை பயன்படுத்தப்பட்ட நூல்களைக் கொண்டும், குண்டலகேசி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எழுந்த நூல் எனக் கூறுவர். குண்டலகேசியை இயற்றியவர் நாத…
மேலும் படிக்க »ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான வளையாபதி நூல் கிடைக்கவில்லை. இதன் கதையை வைசியபுராத்தால் அறியலாம் என்பர். இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனினும் 'நிக்கந்த வேடத்து இருடி கணம்' என்றும், 'அறிவன்' என்றும் இதன் பாடல்கள் கூறுவதால் இக்காப்பியம் சமண நூல் என்பதனையும், இயற்றியவர் சமணப் புலவர் என்பதனையும், அறிகின்றோம். கிடைத்த பாடல்களில் சில ஆறடிப் பெற்ற பாடல்களாக இருக்கின்றன. நாலடியாக வரும் பாடல்களில் சில, இரண்டு வெவ்வேறு எதுகையைப் பெற்று வருவதால் இந்நூல் இளம்பூ…
மேலும் படிக்க »IV சோழர் காலம்கி.பி. 850 - 1350ஐம்பெருங் காப்பியங்கள்சீவக சிந்தாமணிஐம்பெருங்காப்பியங்களைக் கூறும் போது, காலத்தே பிற்பட்ட சீவக சிந்தாமணியை முற்பட மொழிதல் மரபு. காப்பியத்தின் செம்மையான அமைப்பை முழுமையாகப் பெற்று , பின்னே எழுந்த காப்பியங்களுக்கு வழிகாட்டியாகி, சமண காப்பியம் ஆயினும் ஏனைய சமயத்தவராலும் ஏற்றிப் போற்றப்படுவதால் இதனை முதலாவதாக அமைத்தனர் போலும். தமிழ் காப்பியங்களில் பழைய உரை பெற்றவை இரண்டு. அவை சிலப்பதிகாரமும் சிந்தாமணியுமாம். சங்க நூல்கள் பலவற்றுக்கு உரை வகுத்த…
மேலும் படிக்க »